திங்கள், 30 டிசம்பர், 2024

போட்டி போட்டு தூத்துக்குடியில் தவெக கட்சி துண்டு பிரசுரம் விநியோகம் ஆர்ப்பாட்டம் காவல்துறை கைது நடவடிக்கை நடந்தது என்ன??

Tamil Nadu updates,

news by Arunan journalist 

தனித்தனியாக போட்டி போட்டு தூத்துக்குடியில் தவெக கட்சி  துண்டு பிரசுரம் விநியோகம் ஆர்ப்பாட்டம் காவல்துறை கைது நடவடிக்கை



தூத்துக்குடியில் நிர்வாகிகள் தனித்தனியாக போட்டி போட்டு தூத்துக்குடியில் தவெக கட்சி  துண்டு பிரசுரம் விநியோகம் ஆர்ப்பாட்டம் தவெக கட்சி சேர்ந்த சிலரை காவல்துறை கைது  பண்ணி மண்டபத்தில் அடைத்தது


இது பற்றிய செய்தியாவது


தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழகம் இஞ்சினியரிங் மாணவி க்கு நேர்ந்த பாலியல் வன்முறை அதற்கு காரணமாகவர்களை கண்டித்து தமிழக சகோதரிகளுக்கு உருக்கமாக கடிதம் வெளியிட்டார் பின்பு  தமிழக ஆளுநர் ரவியை நேற்று விஜய் சந்தித்தார்.


இந்நிலையில்..

 தவெக கட்சி யினர் இது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் தவெக மகளிர் அணியினர் தலைவர் விஜய் அண்ணா எழுதிய கடிதம் என கூறி கடித நகலெத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார்கள் சில இடங்களில்  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


தூத்துக்குடி

முதல்வர் வருகை!!!


தூத்துக்குடியில் நேற்று 30-12-2024 முதல்வர் ஸ்டாலின்    மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும்  "புதுமை பெண் திட்டம்" துவங்கி வைத்திட வருகை தந்தார்



இவ்  வருகையொட்டி நேற்று வேறேதும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி விட கூடாது கவனத்தில்  தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை ரொம்ப அலர்ட் ஆக இருந்தது

அதிமுக ஆர்ப்பாட்டம் கேன்சல்!!!

நேற்று தூத்துக்குடியில் அண்ணா பல்கலைக்கழகம் இஞ்சினியரிங் மாணவி நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காவல்துறையை தன் வசம் வைத்து உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து நடைபெற இருந்த எதிர் கட்சி அதிமுக ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற விடாமல்?

 சட்டம் ஒழுங்கு கெடும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வினருக்கு நெருக்கடி கொடுத்து தடுத்து விட்டது.


இந்நிலையில்...

முதல்வர் நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் காவல்துறை அசந்து இருந்த நேரத்தில் காலையில் தூத்துக்குடி தவெக நிர்வாகி எஸ் டி ஆர் சாமுவேல் ராஜ் ஏற்பாட்டில் தவெக மகளிர் அணி மரியோ பெரிஸ்கின் தலைமையில்  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக பக்காவாக பிளான்  பண்ணி தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டு  தவெக கட்சி மகளிர் கள் சட்ட கல்லூரி மாணவிகள் கூட்டமாக கூடினார்கள்.


அங்கேயே செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்கள்.



தவெக தலைவர் விஜய் அண்ணா எழுதிய கடிதம் என கூறி பொதுமக்களிடம்  பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி துண்டு பிரசுரம் வழங்கி கலக்கினார் கள்.



பின்பு அப்படியே கலைந்து சென்றனர் அப்போது காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை


இச் செய்தி முதலில் உடனே தூத்துக்குடி லீக்ஸ் - லும் சிறிது நேரத்தில் டூட்டி ரியல் நியூஸ், டூட்டி ஆன்லைன் மற்றும் சத்யம் தமிழன் டிவி ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்பட்டது


அடுத்தாக அவசரமாக மதியத்திற்கு பின்பு தனித்தனியாக திரண்டனர்.

 தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னஸ் மற்றும் ஓட்டப்பிடாரம் தவெக நிர்வாகி பாலா தலைமையில் விஜய் எழுதிய கடிதம் நகல் துண்டு பிரசுரம் வழங்கி டவும் தென்பாகம் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார் கள்



தூத்துக்குடி தெனபாகம் காவல்துறை தவெக கட்சி சிலரை கைது செய்து தூத்துக்குடி சந்திர மஹாலுக்கு கொண்டு சென்றது.

அடுத்து....

யாராவது தவெக நிர்வாகி கள் வருகிறார் களா என காவல்துறை விழி மேல் கண் வைத்து காத்து கிடந்தது 

அட போங்க யப்பா என சலித்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக