Tamil Nadu updates
Photo news by Arunan journalist
தமிழகத்தை பாதுகாப்பாக படைத்தே தீருவோம்: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தவெக மகளிர் அணியினர் துண்டு பிரசுரம் வழங்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி: தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணியினர், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் வழங்கினர். "தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவது அனைவரின் பொறுப்பு" என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி தவெக மகளிர் அணியினர் சார்பில் மரியோ பெரிஸ்கின் தலைமையில் தவெக மகளிர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவிகள் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து பழைய நிலையம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து தவெக தலைவர் அனுப்பி வைத்த கடிதத்தை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இதனால் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் அண்ணா ஆளுநரை சந்திக்கிறார்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவி மீது நடைபெற்ற பாலியல் கொடுமையை கண்டித்து கடிதம் எழுதினார்,
அடுத்து இன்று ஆளுநரை நேரில் சந்திக்க உள்ளார். இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட உள்ளது.
தவெக தலைவர் விஜய் "பெண்கள் பாதுகாப்பில் சர்ச்சை நீடிக்கக்கூடாது. அனைத்துத் துறைகளும் உறுதியாக செயல்பட வேண்டும்" என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக