Tamil Nadu updates 27-12-2024
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே யூனிபார்ம் அணிந்து வந்த பள்ளி சிறுமி இடம் பணம் அப் பகுதியில் உள்ள பெண் அபேஸ் செய்வதாகவும் சிறுமி யின் தந்தை தட்டி கேட்டதற்கு அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது ஆத்திரமடைந்து ரத்தம் சொட்ட தந்தை கம்பு உடன் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய செய்தியாவது..
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே வந்த
பள்ளி சிறுமி இடம் ரூபாய் 1000 பறித்ததாக கூறுகின்றனர்
சிறுமி அடையாளம் காட்டிய பெண்ணிடம் சிறுமி யின் தந்தை பணம் கேட்டாராம்
தந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது
தகராறில் அந்த பெண் தனது கையில் வைத்துள்ள கைத்தடியால் ஓங்கி பலமாக சிறுமி யின் தந்தையை தாக்கினார் இதனால் அவரது மண்டை உடைத்து ரத்தம் கொட்டியது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி யின் தந்தை அந்த பெண்னை அடிக்க கையில் பெரிய கம்புடன் மதுஅருந்தி விட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முழுவதும் அப் பெண்னை திருப்பி அடிக்க சுற்றி வந்தார்.
அடித்த அந்த பெண் காணவில்லை
இதனால்.. சிறுமி உடன் அங்கு தரையில் விரித்து உள்ள ஊசி பாசிமணி விற்பவர்களையெல்லாம் துரத்தி கொண்டு இருந்தார்.
பொதுமக்கள் வியாபாரிகள் மத்தியில் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியது.
சமாதானப்படுத்திய வியாபாரிகள்!!!
ஒரு கட்டத்தில்... அப் பகுதி வியாபாரிகள் பொது மக்கள் அவரை போலீஸ் பூத் முன் தடுத்து நிறுத்தி ரத்தம் வழிகிறது சிறுமி அழுகிறாள் மருத்துவமனை செல்லும் படி தந்தை யை சமாதானப்படுத்தி கொண்டு இருந்தார்கள்
தாமதமாக போலீஸ் வருகை!!!
அப்போது தான் வடபாகம் போலீஸ் அதிகாரிகள் வந்து விட்டனர்
வடபாகம் காவல்துறை அதிகாரிகள் உடனே அவரை விசாரித்து அவரின் மனைவியை வரவழைத்து ஆட்டோ வில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு அனுப்பி வைத்தார்கள்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே (பூத்)ஒரு காவலர் கூட சம்பவம் நடந்த இரண்டு மணி நேரமாக இல்லை பூத் பூட்டப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே காவல் நிலையத்தில் பூத் எந்த நேரமும் காவலர்கள் இருக்க வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தார்கள்.
மேலும் செல் போன் திருட்டு பணம் அபேஸ் குடிபோதை ஆசாமிகள் நடமாற்றம் தொந்தரவு இருப்பதாகவும் அதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே அங்கு சில பேரால் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக