வியாழன், 6 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா – மாவட்ட ஆட்சியர் உறுதி

தூத்துக்குடி செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி: மாவட்டத்திலுள்ள செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உறுதியளித்தார்.


தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செய்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். செயலாளர் மோகன்ராஜ், பட்டா வழங்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கி, இதுவரை ஏற்பட்ட தடைகளை பற்றி ஆட்சியரிடம் எடுத்துக்கூறினார்.



இதுகுறித்து, செய்தியாளர்கள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், எந்த போராட்டத்திலும் ஈடுபட தேவையில்லை என்றும், அனைத்து செய்தியாளர்களுக்கும் விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.


மேலும், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அருகில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் பிரபுவுக்கு அவர் உத்தரவிட்டார்.


இந்த சந்திப்பில், பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், ராஜன், டேவிட் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக