தூத்துக்குடியில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்
Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப். 8:
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நாளை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள் தொண்டு அறக்கட்டளை மற்றும் நெல்லை கேன்சர் கேர் சென்டர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்!!!
நாளை (08.02.2025) காலை மகளிர் பூங்காவில் (வ.உ.சி கல்லூரி அருகில்) நடைபெறும் இந்த முகாமில் மகளிர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாநகராட்சி ஆணையர் வி.மதுபாலன், ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு!!!
இந்த முகாமில் புற்றுநோய் நிபுணர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், புற்றுநோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவுள்ளனர்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக