தவெக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவெக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூன், 2026

விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு மூட் அப்செட்டில் திமுக

Tamil Nadu updates, 

கட்டுரை செய்தியாளர் ரோஜா அருணன் 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு  மூட் அப்செட்டில் தி மு க !!!

தூத்துக்குடி ஜுன் 6

இதுபற்றிய சுவாரஸ்யம் கொஞ்சம்  பார்க்கலாம் ...


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில்  தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல்வர் ஆக  ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றார் 


சட்ட மன்ற தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் போட்டியிட்ட  இந்த இரண்டு கட்சிக்கும் கூட்டணி மற்றும் தங்கள் கட்சி உடைந்து சேதாரம் சொல்ல முடியாத வலியில் இருந்து வருகின்றன.  


அடுத்த கட்டமாக விரைவில்...மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்த வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன....


திமுக கோட்டையாக சென்னை தூத்துக்குடி!!!

 கடந்த காலங்களில்  தி மு க கோட்டையாக சென்னையும் தூத்துக்குடியும் இருந்து வந்தது


 கடந்த 2021 உள்ளாட்சி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற போது தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிப்பு வெளிவர இருந்தது.

 அதை தூத்துக்குடி ரிசர்வ் தொகுதி என வரவிடாமல் சுயநல ஆதிக்க சக்திகள் தங்களது பண பலத்தால்  கவனிப்பு களால் ? ஆட்சி மற்றும் அதிகாரிகள் பொது நிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் 

thoothukudileaks


கடந்த 2021 ல் தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி  ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் மேயராக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டியது .


தூத்துக்குடி பதிலாக சென்னை!!!

சுழற்றியடித்த சுனாமி சென்னை மாநகராட்சி பக்கம் விசியது   ரிசர்வ் பகுதி என தூத்துக்குடி மாநகராட்சி மாறுவதற்கு பதிலாக...


சென்னை மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிக்கப்பட்டு திமுக மேயராக பிரியா வந்தார்.


 தற்போது இந்த தடவை தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் மேயர் ஆக வருவார் என்கிறார்கள் 


கெத்து காட்டும் திமுக!!!

தமிழகத்தில் அதிகப்படியான இடத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் ஆளும் கட்சி தவெக வெற்றி பெற்று இருந்தாலும் ...


தூத்துக்குடி மாவட்டத்தில்  தி மு க மூன்று எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் இப்போது வரை தி மு க கெத்து காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி திமுக என்றால்?

தற்போது தூத்துக்குடி  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி இருந்து வருகிறார்   

இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த தம்பி தான்  தூத்துக்குடியில் திமுக என்றால் மறைந்த முரட்டு பக்தர் பெரியசாமியின் அரசியல் வாரிசுகள் தான்.


வேற யாருக்கும் விட்டுக் தரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்கள் 

thoothukudileaks


மூடு அப் செட்டில்!!!

வருகின்ற மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவி ரிசர்வ் என ஆகிறது என்றால் இவர்கள் யாரோ பதிவு சுகம் பெற வேலை செய்யனுமா என்ற நிலை வரும் பதவி அதிகாரம் இல்லாத தூத்துக்குடி தி மு க நிச்சயமாக 5 வருடங்கள் தாக்கு பிடிக்க முடியுமா  என அதிர்ச்சியில் மூடு அப் செட்டில் உலவி கொண்டு இருக்கிறார்களாம்   

வீடியோ பார்க்க 

துள்ளி குதிக்கும் ஒரு தரப்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதியா ஒரு தரப்பு துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது 

ஏற்கனவே இதுவரை 75 வருடங்களாக  ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ் திமுக அதிமுக செய்யாத ஒன்று  தவெக நிகழ்த்தி காட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை  அமைச்சர் பதவி என்பது ஆதிக்க சக்திகளுக்கு தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் வழங்காமல் மறுக்கப்பட்டு  அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் ?...

இந்த தடவை 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ரிசர்வ் தொகுதியில் தவெக  எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மதன் ராஜா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

தூத்துக்குடி லீக்ஸ் க்காக,...

தகவல் கட்டுரை 

செய்தியாளர் 

ரோஜா அருணன் 

புதன், 20 மே, 2026

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி! திமுக அதிமுக தேர்தல் சோகத்தில் தண்ணீர் பந்தல் திறக்க மனமில்லையா ?

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் பிரத்யேக செய்தி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி!

தூத்துக்குடி: மே20

மே மாதம் பாதியை கடந்த நிலையிலும் தூத்துக்குடியில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகம் தணிக்க மாநகராட்சி சார்பில் இதுவரை தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றத்தில் பொதுமக்கள்:

​தூத்துக்குடி மாநகரில் வருடந்தோறும் கோடைகாலம் தொடங்கிவிட்டாலே, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அந்தந்த வார்டு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் தொடங்கி, கத்திரி வெயிலும் உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஒரு இடத்தில் கூட தண்ணீர் பந்தல் அமைக்க எவ்வித நடவடி்ககையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

thoothukudileaks


​திமுக -அதிமுக அரசியல் கட்சிகளின் மௌனம் – தேர்தல் சோகமா?

​பொதுவாக வருடந்தோறும் கோடைகாலம் வந்துவிட்டாலே தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இளநீர் என போட்டி போட்டுக் கொண்டு அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பந்தல்களை திறந்து வைப்பார்கள். 


கடந்த காலங்களில் மாவட்ட எம்பியான கனிமொழி அவர்களும் தனது சொந்த செலவில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து மக்களின் தாகம் தணித்தார்.

​ஆனால், இந்த 2026-ல் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் பிரதிநிதியோ தண்ணீர் பந்தல் அமைக்க முன்வரவில்லை. "தேர்தல் முடிவுகளின் சோகத்தில் அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதால், எங்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்க மறந்துவிட்டார்களா? அல்லது பொதுமக்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்களா?" என்று வெயிலில் அலையும் பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.


எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா?

​தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஸ்ரீநாத்  இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​மாநகராட்சி நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, தூத்துக்குடியின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வார்டு பகுதிகளில் உடனடியாக கோடைகால தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்.

வெள்ளி, 8 மே, 2026

எம்எல்ஏக்கள் தலைக்கு 10 கோடி? அதிரும் அரசியல் சந்தை!

"தூத்துக்குடி லீக்ஸ்" (Thoothukudi Leaks) நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி லீக்ஸ் ஸ்பெஷல்: 08-05-2026

💥 அதிரடி ஆட்டம் ஆரம்பம்! எம்.எல்.ஏ-க்களுக்கு வலைவீசும் கட்சிகள்: ஆடிப்போயுள்ள தமிழக அரசியல் களம்!

சென்னை / தூத்துக்குடி:

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு 'சதுரங்க வேட்டை'யாக மாறியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி வருகைக்குப் பிறகு, ஆட்சியைத் தக்கவைக்கவும், கைப்பற்றவும் பிரதான கட்சிகளுக்கு இடையே நடக்கும் இந்த "குதிரை பேரம்" உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

🧤 அலேக்காக தூக்க பிளான்!

​ஒருபுறம் தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களைத் தனது பக்கம் இழுக்க ரகசியத் திட்டம் தீட்டி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால் ஆளுங்கட்சியான திமுக-வும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வும் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

thoothukudileaks


🛡️ ஸ்டாலின் Vs எடப்பாடியார்: பதிலடி வியூகம்!

  • திமுக தரப்பு: தவெக-வின் பிளானை முறியடிக்க, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேரடியாகக் களமிறங்கி, தவெக-வின் எம்.எல்.ஏ-க்களையே வளைக்கத் தனி டீம் அமைத்து ஸ்கெட்ச் போட்டு வருகிறார்.
  • அதிமுக தரப்பு: ஏற்கனவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நழுவிவிடக் கூடாது என்பதற்கான பதற்றம் ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் முகாமிட அதை போய் அவசரமாக சென்று வந்ததும் , ஒரு கணிசமான அளவு தவெக எம்.எல்.ஏ-க்களை இழுத்துவிட்டால் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கருதி, அதற்கான காய்நகர்த்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

💰 தலைக்கு 10 கோடி? அதிரும் அரசியல் சந்தை!

​தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம் "விலை". ஒரு எம்.எல்.ஏ-வின் தலைக்கு ரூ. 10 கோடி வரை பேரம் பேசப்படுவதாகத் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியலில் பணப்புழக்கம் மற்றும் பதற்றம் ஒருசேர அதிகரித்துள்ளது.

✋ விஜய் படம் மீது சத்தியம்!

​தங்கள் எம்.எல்.ஏ-க்கள் விலை போவதைத் தடுக்க தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்  அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். எம்.எல்.ஏ-க்களிடம் தலைவர் விஜய்யின் படத்தை வைத்து, "கட்சி மாறமாட்டோம்" எனச் சத்தியம் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

லீக்ஸ் பார்வை: > சத்தியமும், பணமும் மோதும் இந்த அரசியல் விளையாட்டில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்? கோட்டையில் கொடி ஏற்றப்போவது உதயசூரியனா? இரட்டை இலையா? அல்லது தவெக-வின் வெற்றிக் கொடியா?

காத்திருப்போம்... சதுரங்க ஆட்டம் இப்பதான் சூடுபிடிச்சிருக்கு!


 செய்தி புகைப்படங்கள் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தூத்துக்குடி பெரிய ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக உட்பட ஐந்து கட்சிகள் அதிரடியாக கட்சி பிரச்சாரம் செய்திட தள்ளுமுள்ளு பரபரப்பு காவல்துறை திணறல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி ஏப்ரல் 17

தூத்துக்குடி பெரிய  ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக கட்சி பிரச்சாரத்தில் தள்ளுமுள்ளு   திணறி போன் தூத்துக்குடி காவல்துறை.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் (ஏப்ரல் 17)  இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வருவார்கள்

thoothukudileaks
அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் குல்லா அணிந்தவாறு...


காத்துகிடந்த அதிமுக!!!

இதை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் முன்னதாக தொழுகை நேரத்தில் இருந்து ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அலுவலக அறையில் காத்திருந்தார்.

 அப்போது அனுமதி பெற்றதை காட்டுங்க என்ற போலீஸ் பெண் அதிகாரி கேட்டதும் இன்று ஷாட் பிரச்சார விவரத்தை காவல்துறை இடம் காட்டினார். 

ஜாமியா பள்ளி வாசல் தொழுகை முடிந்ததும் மக்கள் வெளிவர ... தொடங்கினர் அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன்  தலைமையில் குல்லா அணிந்து வாறு தனது கட்சியினர் இம்ரான் நாசர் ஜெய்கணேஷ்  ஜான்சன் தேவராஜ் தங்க மாரியம்மன் மிக்கேல் ஆகியோர் உடன் அதிமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கினர் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது 

பதறி போன திமுக!!!

இதைப் பார்த்த திமுக வினர் ரொம்பவே பதறி போய் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பள்ளி வாசல் உள்ளே வந்து திமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்க வந்தார்கள்.

thoothukudileaks
திமுக கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் 


 பிரச்சனை வரும் என கருதி நீங்களும் அனுமதி பெறாமல் உள்ள வர வேண்டாம் என்று தடுக்க அதை மீறி பள்ளி வாசல் உள்ளே வந்து அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கும் அவர் அருகிலே உதயசூரியன் ஒட்டு போடுங்கள் என கூறியபடி  துண்டு பிரசுரங்கள் வழங்க பரபரப்பு உண்டானது. கைகலப்பு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது .

thoothukudileaks
வேட்பாளர் கிதர் பிஸ்மி 


போலிஸ் திணறிய நிலையில் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் வேட்பாளர் கிதர் பிஸ்மி அவரது சின்னமான கேமிரா உடன் வந்தார் 

வேட்பாளர் ஏசாதுரை 

அடுத்து சசிகலா கட்சி புரட்சி  முன்னேற்ற கழக வேட்பாளர் ஏசாதுரை தனது கட்சி நிர்வாகிகள் உடன் ஓடோடி வந்து சேர்ந்தார்.

பறந்தோடி வந்த தவெக !!!

கடைசியாக இந்த செய்தி கேள்விப்பட்ட விஜய் கட்சி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ரசிகர்கள் இளைஞர்கள் பட்டாளத்துடன் பறந்தோடி வந்து துண்டுபிரசுரங்கள் வழங்க போலீசார் சில மணி திணிறித்தான் போனார்கள்

thoothukudileaks
தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 


ஒரே நேரத்தில் பல கட்சிகள் குவிந்ததால் போலீஸார் சிறிது நேரம் திணறிப் போனாலும், பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

thoothukudileaks


தேர்தல் நெருங்க நெருங்க வழிபாட்டுத் தலங்களும் அரசியல் களமாகி வருவது இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.

thoothukudileaks


— தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்





வியாழன், 16 ஏப்ரல், 2026

தவெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

மக்களின் தேர்தல் அறிக்கை" என்ற பெயரில் த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை வெளியீடு.. பெற்றுக்கொண்ட விவசாயி நாராயணன்


thoothukudileaks


📌"சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது"


📌"60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500"


📌"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்"


📌"மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை"


📌தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள்


📌ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம்


📌போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு 


📌குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம்


📌வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000


📌 டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500


📌5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்


📌5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி


📌கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் 


#TVK