Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, மார்ச் 15:
மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.
இந்த ஆர்ப்பாட்டம் 15.03.2026 அன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை வழங்கவில்லை என்றும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. “தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை” எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக