Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடி, மார்ச் 15
விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவி பிரதீபா காணாமல் போய் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10.03.2026 அன்று மாலை 6.00 மணியளவில் மாணவி பிரதீபா வீட்டிலிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் காணாமல் போன நிலையில், 11.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவரது சடலம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஊர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 14.03.2026 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் சமூக அமைப்பினர் வேடநத்தம் கிராமத்திற்கு சென்று மாணவி பிரதீபாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது மாணவியின் தந்தை மற்றும் சகோதரிக்கு ஆதரவளித்து, இந்த வழக்கில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியளித்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து ஆதரவும் தரப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இந்த சந்திப்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஸ்டெர்லைட் போராளி பேராசிரியர் பாத்திமா பாபு, வழக்கறிஞர்கள் மாடசாமி, கணேசன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் குரு நாகலிங்கம், ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான மின்னல் அம்ஜத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக