செவ்வாய், 18 நவம்பர், 2025

தூத்துக்குடியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates 

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி, நவம்பர் 19 -

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள், தங்களது 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

thoothukudileaks



thoothukudileaks

 காலவரையற்ற வேலை நிறுத்தம் !!!

மாவட்ட தலைநகரான தூத்துக்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 19-11-2025 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் தேவசேனாதிபதி, பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 அம்ச கோரிக்கை!!!

நில அளவை அலுவலர்கள் தங்களது 18 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் மாவட்ட அளவிலான நில அளவை பணிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வீடியோ பார்க்க 

ஒன்றிப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

thoothukudileaks


இந்த நிலையில், அரசு சார்பில் விரைவில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக