செவ்வாய், 18 நவம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் – செய்தி

தூத்துக்குடி:நவ 19

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.




மாநகராட்சி ஆணையர் பிரியங்காவின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும்– வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு– வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களுக்கு விரைவான தீர்வு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.




இன்று (19.11.2025) நடைபெற்ற கிழக்கு மண்டல குறைதீர்ப்பு முகாமில் இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பழுது, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்கள் மனு அளித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக