வெள்ளி, 5 செப்டம்பர், 2025

வ.உ. சிதம்பரனார் 154-வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடியில் தவெக சார்பில் கொண்டாட்டம்

Tamil Nadu updates, photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

வ.உ. சிதம்பரனார் 154-வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடியில் தவெக சார்பில் கொண்டாட்டம்

தூத்துக்குடி: செப் 5
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரரும், மண்ணின் மைந்தருமான கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 5) மாநிலம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இதையொட்டி தூத்துக்குடி கிழக்கு மண்டல நகராட்சி வளாகத்தில் உள்ள சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு, தவெக முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.



இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ், உஷா, அன்னை பெசி, சந்தனராஜ், ராஜா, கண்ணன், கிறிஸ்து ராஜா, நிர்மல், சுதன், பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்ார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக