திங்கள், 7 அக்டோபர், 2024

கடுமையான சொத்து உயர்வு வரியை திரும்ப பெற தூத்துக்குடியில் அதிமுக மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

 

கடந்த 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.



 இதற்கு காரணமான விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும், கடுமையாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை பொதுமக்கள் நலன் கருதி திரும்பப் பெற வலியுறுத்தியும், 


 அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடியார் பழனிச்சாமி தலைமையில் இன்று 8-10-2024 தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது




தூத்துக்குடியில் இன்று 08.10.2024 செவ்வாய்க்கிழமை காலை சரியாக 10.00 மணிக்கு தூத்துக்குடி டபிள்யூ ஜி சி ரோடு குரூஸ் பர்னாந்து சிலை முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ்.பி.சண்முகநாதன்  தலைமையில்

மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது 



தூத்துக்குடி சிக்னல் ஜயா குருஸ் பர்ணாந்து சிலை முன்பு 

 தொடங்கி சத்யா ஏஜன்சி வரை நீண்ட நெடிய இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசின் அராஜக வரி உயர்வை கண்டித்து கோஷமிட்ட வாறு  நின்றார்கள் .



அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகரங்களில் மற்றும் ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார் திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, காணம், ஆத்தூர், தென்திருப்பேரை, நாசரேத் ஆகிய பேரூராட்சி கழகங்களின் சார்பில் அந்தந்த பகுதியில் அதிமுகவினர்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக