thoothukudi leaks 11-11-2024
photo news by
sunmugasuthram Reporter
தோ்தல் நாளன்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள் பூத் கமிட்டி பாகமுகவா்கள் தான்
நீங்கள் தான் அன்றைய தினம் முக்கியமானவர்கள் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
கலைஞர் அரங்கில் ஆலோசனை கூட்டம்!!!
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பாகமுகவா்கள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அமைச்சர் கீதா ஜீவன் !!
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்பான கட்டளையுடன் கூடிய உத்தரவை எல்லா மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கியது மட்டுமின்றி தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் பல அறிவுரைகளுடன் கூடிய கட்டளைகளை பிறப்பித்துள்ளாா்கள்
நிறைவேற்றுங்கள்!!!
அதையெல்லாம் நிறைவேற்றும் இடத்தில் பாகமுகவர்களாக நீங்கள் இருக்கின்றீா்கள். இதை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.
தேர்தல் நாளன்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து முட்டு கொடுப்பவர்கள் நீங்கள் தான் என்பதை நாங்கள் அறிவோம்.
வெற்றி நிச்சயம்!!!
அதற்கேற்றாற்போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முதலமைசசர் அமைத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் நாம் பணியாற்றிய காரணத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
அதே போல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார் தளபதியார் நாம் அதையும் கடந்து நிச்சயம் வெற்றி பெறுவோம்.
திமுக கட்சி தலைமை பேசும்!!!
ஓவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்கும் பாக முகவர்கள் 10 பேரும் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். உங்களது பட்டியல் தலைமை கழகத்திற்கு வழங்கப்படும். அங்கிருந்தே தொடர்பு கொண்டு பேசும் சூழ்நிலை வரும். என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
புதிய வாக்காளர் பட்டியலில் நம் வீட்டு பிள்ளைகளின் பெயா்களை சேர்க்க வேண்டும். 13ம் தேதி இரவு துணை முதலமைச்சர் நம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவுள்ளார்.
அன்றையதினம் புதூர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மறுநாள் ஓரு திருமண நிகழ்ச்சியிலும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அனைவரும் பங்கெடுத்துக்ெகாள்ள வேண்டும். என்று பேசினார்.
துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை பற்றி ...
இன்பா ரகு!!!
மாநில இளைஞர் அணி துணைசெயலாளரும் தூத்துக்குடி தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான இன்பாரகு பேசுகையில்... தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள...
" நான் இங்கு பணியாற்றுவதற்கு வரவில்லை திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்ற அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும்."
என்பதற்காக நியமனம் செய்யப்பட்டு உங்களோடு பணியாற்றி அதை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன்.
இந்த பாகமுகவர்கள் எல்லோருக்கும் முக்கியமான கடமை உண்டு.
அதில் உள்ள குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் தொிவிக்கலாம். உங்களுக்கு உதவிகள் செய்வதற்கு அமைச்சர் கீதாஜீவன் இருக்கிறார். எவ்வித தயக்கமும் இன்றி பணியாற்ற வேண்டும். என்று பேசினார்.
பாக்ஸ்:
கூட்டம் ஆரம்பமானதும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 வாா்டுகளில் உள்ள பாகமுகவர்கள் பெயர் வாசிக்கப்பட்டு வந்தவா்கள் குறித்த குறிப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது.
6 வார்டுகளில் உள்ள பாகமுகவர்கள் குறைவாக வந்த காரணத்தால் வட்டச்செயலாளர்களை அழைத்து காரணம் என்ன என்று அமைச்சர் கீதாஜீவனும் இன்பா ரகுவும் கேட்டறிந்தனர்.
பட்டியல் தயாரிப்பு!!!
அதற்கு விளக்கமளித்த வட்டசெயலாளர்களிடம் பணி செய்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டால் தொிவித்து விடுங்கள் புதியவர்கள் நியமணம் செய்யப்பட்டு 11ம் தேதிக்குள் பட்டியல் தயாாிக்கப்பட்டு 12ம் தேதி தலைமை கழகத்தில் ஓப்படைக்க வேண்டும். என்று இருவரும் கண்டிப்புடன் தொிவித்தனர்.
இனி நடைபெறுகின்ற கூட்டம் தொகுதிக்குட்பட்ட ஓவ்வொரு வார்டு பகுதிகளிலும் நடைபெறும் என்று தொிவித்தனர்.
கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா,
பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், இராஜா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜோசப், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மேகநாதன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,
இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், செல்வின், பிரவீன்குமாா், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரூபஸ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா்,
மகளிர் அணி கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளாகள் அருணாதேவி, நாகராஜன், மாநகர அணி நிா்வாகிகள் சாகுல்ஹமீது, டைகர்வினோத், சந்தனமாாி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமாா், செல்வகுமாா், மீனாட்சிசுந்தரம், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா்,
கவுன்சிலர்கள் சரவணக்குமாா், கண்ணன், பொன்னப்பன், ரெக்ஸின், ஜெயசீலி, மாியகீதா, கந்தசாமி, விஜயகுமாா், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், ரவீந்திரன், சுப்பையா, முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், கருப்பசாமி, மனோ, சேகா், செந்தில்குமாா், ரவிசந்திரன், பத்மாவதி, சிங்கராஜ், பொன்னுச்சாமி, கங்காராேஜஷ், ராஜாமணி, ஜான்சன், சதிஷ்குமாா், முனியசாமி, முக்கையா, பொன்பெருமாள், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் செந்தூர்பாண்டி, மற்றும் கருணா, பாஸ்கா், மணி, அருணகிாி, அற்புதராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக