தூத்துக்குடி லீக்ஸ் 9-10-2023
நாட்டை காப்போம் கூட்டமைப்பு முன்னெடுக்கும் பரப்புரை கலைப்பயணம், பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் 08/10/2023 ஞாயிறு நேற்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
விஷமத்தனமான,மதரீதியான பொய் பிரச்சாரத்தை கட்டமைத்து கேடுகெட்ட பரப்புரையை காலங்காலமாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை களைவோம்.
அடிப்படையில்
சட்டம் ஒழுங்கு,
மதநல்லிணக்கம்,
பொது அமைதி, ஏற்படுத்துவோம் பரப்புரை செய்தார்கள்
சமூக வலைதளங்களில் ஆர்கனைஸ்ட்டாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யை, அவதூறை உண்மைக்கு புறம்பான, செய்தியை மதபிரச்சாரத்தை, வெறுப்பு பிரச்சாரத்தை செய்து மக்களை பிளவுபடுத்துகிற அரசியல் கட்சிகளை புறந்தள்ள வேண்டும்
பெண்கள், குழந்தைகள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர், மீனவர்கள்
அனைத்து வகை தொழிலாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு பணியாளர்கள், என நமது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும்
உரிமைகளை கடமைகளை வழங்கும், பாதுகாக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என பொதுகூட்டத்தில் பேசினார்கள்
இப் பொதுகூட்டத்தில்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இக்பால் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார் மற்றும்
வணிகரணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான்,
முகாம் பொறுப்பாளர் நூர்,
வழக்கறிஞர் அணி அர்ஜுன்,
முன்னாள் தொண்டரணி அமைப்பாளர்
பட்டு வளவன்
வழக்கறிஞர்
அணி இளையவளவன்
மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக