thoothukudileaks 9-10-2023
Photo news by sunmugasunthram
தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது
இதில் கலந்து கொண்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பேசுகையில்....
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் முழுவதும் கொண்டாட வேண்டும் அவரது சாதனைகள் மற்றும் எல்லாத்துறையிலும் முத்திரை பதித்ததை நாட்டுமக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும். என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட எல்லா பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதனையடுத்து சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்க போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும்.
எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும் விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறையினராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் எல்லாத்துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். என்று பேசினார்.
விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக