thoothukudileaks 8-10-2023
photo news by arunan journalist
பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அரசியல் பரபரப்புடன் தூத்துக்குடியில் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் இன்று 8-10-23 திறப்பு விழா கோலாகலமாக வெகு விமரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இது பற்றி செய்தியாவது
தூத்துக்குடியில் பழைய பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் சீர்மிகு நகர திட்டத்தின் படி 57 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு இன்று 8-9-2023 காலை 11-30 மணியளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரிப்பன். கட் பண்ணி திறந்து வைத்தார்கள்.
பின்னர் உள்பகுதி பேருந்து வளாகத்தில் மலர் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த குத்துவிளக்கில் மெழுகுவர்த்தி யால் திரியில் 🔥 தீபம் ஏற்றினார்கள்.
அடுத்து சரியாக 12-03 pm தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பெயர் பொறித்த அடிக்கல் ஸ்கீரின் ரிமோட் ஜ வைத்து கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
ரூபாய் 87 கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணிகள், மீன்வளத்துறை சார்பில் ரூபாய் 9 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடம், பொதுப்பணித்துறை சார்பில் எட்டயபுரத்தில் ரூபாய் 5.63 கோடி மதிப்பில் சார் பதிவாளர் கட்டிடம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.75 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் 1to 4 ஃப்ளோர் வரைபடம்
தூத்துக்குடி அம்பேத்கார் நகரில் ரூபாய் 29 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா திறக்கப்பட்டது.
திறப்பு விழா மேடையில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது... |
உடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் .ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர்.தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா பேருந்து நிலையம் திறப்பு விஷயத்தில்...
தூத்துக்குடி யில் திமுக அதிமுக பாஜக அரசியல் கட்சிகள் பரபரப்பு காட்டியது
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் வர நாங்க தான் என அதிமுக பாஜக கட்சிகள் இன்று தூத்துக்குடி மாநகரில் பரபரப்பு போஸ்டர் ஒட்டி இருந்தார்கள் அதே போல் திமுகவும் ஒருவிதமாக பரபரப்பு போஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.
திறப்பு விழா முந்தைய தினம்7-10-203 காலை தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் நுழைவு வாயில் எழுத்து அருகில் பிரதமர் மோடி படத்தை ஒட்டியதும் .. பின்பு கிழிக்கப்பட்ட தும் பரபரப்பாக
அடுத்து திறப்பு விழா நடைபெறும் போது தூத்துக்குடி பாஜாகா தரப்பு கறுப்பு கொடி காட்டுவோம் என கிளப்பி விட்டது வேற டென்ஷன் ஏற்படுத்தி இருந்தது
பேருந்து நிலையம் சுற்றிலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை
மேயரின் உழைப்புக்கு பாராட்டு
மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் தினேஷ் குமார் காட்டிய விறுவிறுப்பினால்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் இன்று காலை வரை முழு டென்ஷன் ஆகி இருந்தது நிகழ்ச்சி முடிந்ததும் தான் பெருமூச்சு விட்டனர்
கடந்த சில நாட்களாக இரவுபகல்பாராமல்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆனையர் தினேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ரொம்ப மும்மரமாக ஒவ்வொரு விஷயமும் துரிதகதியில் செய்து முடித்தது கண்கூடு இப்போது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக