கனிமொழி எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனிமொழி எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 மார்ச், 2026

வேடநத்தம் சிறுமி மர்ம மரண வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்போம் — கனிமொழி உறுதி

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, 13 மார்ச் 2026:

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் — காளீஸ்வரி தம்பதியரின் 17 வயது மகள் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை, 13.03.2026) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான  கனிமொழி கருணாநிதி, வேடநத்தத்தில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆழ்ந்த ஆறுதல் தெரிவித்தார்கள்.

thoothukudileaks

thoothukudileaks


குடும்பத்தினரிடம் நேரில் உரையாடிய கனிமொழி ...

  "குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம்" என உறுதியளித்தார்கள்.

 நேரில் சென்ற போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்  ஜி.வி. மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

— தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்


ஞாயிறு, 4 ஜனவரி, 2026

கனிமொழி எம்.பி. பிறந்தநாள் சிறப்பு: ALL CAN TRUST சார்பில் 399வது வார மரம் நடும் விழா

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

news by Arunan journalist 

தூத்துக்குடி :டிச4

ALL CAN TRUST சார்பில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர மரம் நடும் நிகழ்ச்சியின் 399வது வார விழா, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) காலை தூத்துக்குடி பிரையன் நகர் வள்ளி நாயகபுரம் அருகே உள்ள கோட்ஸ் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் . ஜெகன் பெரியசாமி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

 தொடர்ந்து நகர்ப்புற பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற மரம் நடும் முயற்சிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வழக்கறிஞர் மோகன் தாஸ் ALL CAN TRUST நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிப்பதற்கான உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர். 

கனிமொழி எம்.பி.  பிறந்தநாளை பசுமை வளர்ச்சிக்கான சேவை நிகழ்வாகக் கொண்டாடியது அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.

சனி, 13 செப்டம்பர், 2025

தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன் கனிமொழி எம்பி கனிமொழி எம்பி நிகழ்ச்சியை புறக்கணித்த தூத்துக்குடி கவுன்சிலர் கள்!!!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி : 13.09.2025

முதல் வீடியோ 


தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன் எனத் தெரிவித்தார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“திமுகவை விமர்சிக்க எடப்பாட பழனிச்சாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதலில் அவர் தனது கட்சியை உடையாமல் காப்பாற்றிக் கொண்டால் நன்று. திமுக கூட்டணி உடையும் என்ற அவரது பகல் கனவு ஒருநாளும் நிறைவேறாது,” என்றார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன்



மேலும், இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர்,
“தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் நிச்சயம் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட்டு, மாநில உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பார். தமிழ்நாடு எப்போதும் உரிமைக்காக போராடி வருகிறது. புதிய துணை ஜனாதிபதி அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்,” எனக் கூறினார்.

அதோடு, மணிப்பூர் தேர்தல் நடைபெறவிருப்பதால் தற்போது பிரதமர் அங்கு சென்றிருப்பதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக முதலில் அந்த பிரச்சினையை கிளப்பியபோது பிரதமர் செல்ல தயங்கியதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.

thoothukudileaks


தொடக்கி வைத்த கனிமொழி எம்பி டிமிக்கி கொடுத்த கவுன்சிலர்கள்!!!

தூத்துக்குடி : 13.09.2025

ஏ ஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அம்பேத்கார் நகர் ஸ்டெம்பார்க் மினி திரையரங்கில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஏ ஐ திறன் பயிற்சி நடைபெற்றது. 

பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய கனிமொழி எம்.பி.,...


“தமிழகத்தில் அனைத்து துறைகளும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. முதன்முதலில் கம்ப்யூட்டர் பாலிசி திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். 



இந்நிலையில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்து பின்னர் முடிவு எடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு ‘ஏ ஐ’ போல் செயல்பட்டவர். 


பலரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுப்பார். அதுபோல், இந்த தொழில்நுட்பத்தையும் எவ்வித தயக்கமின்றி அனைவரும் கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.




ஆனால் எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் இறுதியில் மனித அறிவும் தீர்மானமுமே முக்கியமானது,” என்றார்.கனி மொழி எம்பி 

thoothukudileaks


இக் கூட்டத்தில் அடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரிய சாமி  ஆணையர் பிரியங்கா ஆகியோர் பேசினர்.

thoothukudileaks



கனிமொழி எம்பி நிகழ்ச்சியை  புறக்கணித்த தூத்துக்குடி கவுன்சிலர் கள்!!!!

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஏ ஐ திறன் பயிற்சி இவர்களுக்காக கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி கவுன்சிலர் கள் வராமல் புறக்கணிப்பு செய்தனர். தூத்துக்குடியில் 60 கவுன்சிலர் களில் ஒரு சிலர் மட்டுமே வந்து கலந்து கொண்டனர்.

மாமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தனர்.


இக்கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, இசக்கிராஜா, சுரேஷ்குமார், நகரமைப்பு உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, உதவி பொறியாளர் சரவணன், நகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், திமுக பகுதி செயலாளர் சிவக்குமார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜெஸ்பர், லிங்கராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது வீடியோ 

நடந்து போகும் போது காற்றில் குடை ☂️ பறந்து தரையில் விழுவது போல்!!!


இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது .

வெள்ளி, 7 ஜூன், 2024

எம் பி தேர்தலில் அதிமுகவின் டெபாசிட் போச்சு தூத்துக்குடி திமுக சாதனைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெற்றி!!!

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

photo Roja arunan  

News by sunmugasunthram Reporter 



அதிமுகவின் டெபாசிட் போச்சு தூத்துக்குடி திமுக சாதனை

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெற்றி!!!



   இது பற்றிய செய்தியாவது:-

 இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்றது.


 தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் கூட்டணியோடு 543 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.


 தமிழகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தல் களத்தில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பு திட்டஅமலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தனர்.


  அதே போல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் கள் முழுமையாக எல்லா தொகுதிகளிலும் பணியாற்றியது மட்டுமின்றி மாவட்ட செயலாளர்களும் பல்வேறு அணி பொறுப்பாளர்களும் முழுமையாக களம் இறங்கி பணியாற்றினார்கள்

தின்னை பிரச்சாரம் 

 கடந்த 3 ஆண்டுகால முதலமைச்சாின் சாதனைகளை எடுத்துக்கூறி தின்னை பிரச்சாரம் வரை கொண்டு சேர்த்தனர்.


 இதற்கிடையில் ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்களர்களை சந்தித்து வாக்கு சேகாித்ததில் வேட்பாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி 


தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா காலக்கட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலிருந்து வாகன போக்குவரத்து தடை பட்ட காலத்தில் திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி சென்னையிலிருந்து தனது வாகனம் மூலம் மாவட்டத்திற்கு வந்து எல்லா தொகுதிகளிலும் முடிந்த வரை தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,மேயர், சேர்மன், ஊராட்சி தலைவர்கள் உட்பட ஆகியோர் உடன் இனைந்து பல்வேறு உதவிகளை செய்தார்.



மக்களோடு...

திமுக கனிமொழி 

 இயற்கையாகவே மக்கள் பணியிலிருந்த அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தின் போது கொரானா காலக்கட்டத்தையும் கடந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நேரத்திலும் 40 நாட்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வோடு குறைகளை கேட்டறிந்து எல்லா பகுதிகளுக்கும் உதவிகளை செய்தார். 


மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி எல்லா தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார்.



இதே போல் விளாத்திகுளம் தொகுதியில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏவும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா எம்.எல்.ஏவும் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிகளை செய்திருந்தார்கள். 

நடைபெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. உள்பட 28பேர் களம் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, ஆகியோர் எதிர்த்துநிற்கும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. 

அதிமுக வுக்கு டெபாசிட் போச்சு !!!

அதற்கேற்றாற் போல் எல்லோரும் பணியாற்ற வேண்டும். என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் பேசியது மட்டுமின்றி எந்த முறையில் மக்களை அனுக வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டு கனிமொழி மிகப்பொிய வெற்றியை பெறுவதற்கு துணை புாிந்தது மட்டுமின்றி சொன்னது போல் மிக்பொிய ஆலமரமான அதிமுக உள்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர். 



     அதிலும் குறிப்பாக 6 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளில் 52 வார்டுகள் உள்ளடக்கிய தூத்துக்குடி தொகுதியில் ஓரு வார்டுக்கு 2 ஆயிரம் வாக்குகள் வீதம் 1லட்சத்து 4 ஆயிரம் வாக்குகளை பெற்று இருந்தது 

அதேபோல்...

 திருச்செந்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகளை பெற்று . கிடைத்துள்ளது.

 


மாவட்ட மக்களின் நிறைகுறைகளை எளிய முறையில் கேட்டறிந்து பணியாற்றிய காரணத்தால் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.


 ஓட்டுமொத்த தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளனர்.



செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

கனமழை வெள்ளத்திலும்... ஸ்டெர்லைட் வாழ்க கோஷம் !!! தூத்துக்குடி தகிப்பு!!!

thoothukudileaks 14-2-2024

photo news by arunan 

கனமழை வெள்ளத்திலும்... ஸ்டெர்லைட் வாழ்க கோஷமா ??? !!!

தூத்துக்குடி  தகிப்பு!!!

பொங்கல் அன்றும் விட்டு வைக்காத ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு மற்றும் அட்ராசிட்டிகள்.



இது பற்றிய செய்தியாவது:-

கடந்த 2023 டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரத்தனமான கனமழை பெய்து மழை வெள்ளத்தால் மிகவும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்


வீடுகளில் செல்ல முடியாது வெளியில் தான் பொது மக்கள் இருந்தனர் முன்னூறுக்கும் மேற்பட்ட வர்கள் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்திலும் ஆயிரக்கணக்கானோர் திருமண மண்டபம் என தங்கினர்

தண்ணீர் நிறைந்து இருந்ததால்..சிலர் அப் பகுதியில் வெளிவரா இயலாதநிலை அப்போது அவர்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் அரசு தரப்பில் பசியோடு இருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் எதுவும் செல்ல வில்லை.


தன்னார்வ ஆர்வலர்கள் மற்றும்  இந்து கோவில்கள் கிறித்தவக் ஆலயம் முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் மத அமைப்புக்கள் மற்றும் தமுமுக,பாஜக சேவா அமைப்புகள் அதிமுக வினர் என ஒருவருக்கு ஒருவர் முந்தியவாறு உணவுகள் வழங்கினார்கள்

 அவர்கள் பின்பு நிவாரண பொருட்கள் உதவி  செய்தனர் 




அதிமுக தரப்பில்.... அம்மா கிச்சன் என்று பத்து நாட்கள் உணவு வழங்கினார்கள் 


இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாகனங்கள் முலம் உணவு பொட்டலங்கள் முதலில் பல இடங்களில் முன்னூறு இருநூறு என உணவு வழங்கினார்கள் பின்பு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.


அப்போது  ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வாகனங்கள் வரும் போது ஸ்டெர்லைட் வாழ்க வாழ்க கோஷம் போடுமாறு சொன்னார்களாம்

ஒரு சோற்று பொட்டலம் பெறுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை வாழ்க  கோஷமா ? 

என்ன கொடுமை சார் இது

அரசு தங்கள் பகுதியில் செய்ய வேண்டும் இவர்களை யாரு செய்ய சொன்னது ? உள்ளுர் அமைச்சரா என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வெறுத்து  போனார்கள்

 என்கிறார்கள்.

தூத்துக்குடியில் திரேஸ்புரம் மற்றும் பல பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வாகனங்கள் நுழைய முடியாமல் ஒட  துரத்தி விட்டனர்


தூத்துக்குடியில் இன்னும் அனைத்து பொதுமக்கள் இடம் ஸ்டெர்லைட் ஆலை எதிரான மன நிலை அப்படியே உள்ளது என்பதை காட்டுகிறது.

பார்வை யிட வந்த குழுவுடன் தூத்துக்குடி தேவர் புரம் நடுஞ்சாலையில் சேர் போட்டு அமர்ந்து டீ டைம் அமைச்சர்கள்!!!


தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள் தூத்துக்குடி கீதாஜீவன் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கியதில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி யாம் 

மட்டமான 5 கிலோஅரிசி அரைகிலோ துவரம் பருப்பு தான் டோக்கன் கொடுத்து பல பகுதிகளில் வழங்கியுள்ளார்கள்

பார்வை யிட வந்த நேரு முத்துசாமி மற்ற அமைச்சர்கள் மூட்டை மூட்டையாக சென்னையில் இருந்து வந்த அரிசி பால் பவுடர் ஆயில் எல்லாம் எங்கே போச்சு தெரியவில்லை என்கிறார்கள்.


நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் ஒட்டு வங்கிக்கு வேட்டு வைத்து விட்டார்கள் 

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.கனிமொழி

எம்.பி



 தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் பல பகுதிகளில் கனிமொழி எம்பி நேரில் சென்றார் ஒருகட்டத்தில் மழை தண்ணீர் நிறைந்த பகுதிக்கு செல்ல சற்றும் யோசிக்காமல் உடன் பிறப்பு ஒருவர் டூவீலர்  பைக் ல  பின அமர்ந்து சென்றார் தூத்துக்குடி முன்றாம் மையில் பகுதியில் கனிமொழி எம்பி வந்தவுடன் பொதுமக்கள் பெண்கள் தீடீர் என்று கோபத்தில் அவர் கையை பிடித்து இழுத்து அமைச்சர் தரப்பு தந்த ஒரு பாகஸ்ல இரண்டு இட்லி மட்டும் தான் குழந்தைக்கு கூட  பத்தாதும்மா இப்படி செய்யறாங்க என அப் பகுதி பொதுமக்கள் கேள்வி கேட்டதும் அதிர்ச்சி யாகி விட்டார் பின்பு தனி டிராக்கில் உதவி நிவாரண பொருட்கள் அரிசி வழங்கினார்.

பொங்கல் அன்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு தரப்பும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்களும் தங்கள் வீட்டில் வாசலில் கோலம் போட்டு மோதி கொண்டார் கள்.

கடந்த 2024 தைப்பொங்கல் அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என எதிர்ப்பு கோலம் !!!
அதற்காக எதிர்பார்த்து தைப்பொங்கல் அன்று போடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கோலங்கள்!!!!???

நன்றி
சட்டம் ஒழுங்கு
புலனாய்வு மாத இதழ் 

 கனமழையில் பொதுமக்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ஸ்டிக்கர் ஒட்டி வழங்கிய நிவாரண பொருட்கள்!!!

இந்த சூழ்நிலையிலும்..ஒரு சில அரசியல் டூபாக்கூர் கட்சி கள் மறைமுகமாக புற வாசல் வழியாக மக்கள் எதிர்ப்பு ஆலை தரப்பில் மிரட்டியோ கெஞ்சி யோ வாங்கி நிவாரண பொருட்கள் வழங்கி தங்கள் கட்சி இருப்பதை காட்டி கொண்டார்கள் .

நாம் தமிழர் சீமான் தூத்துக்குடி முத்தையா புரத்தில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்
நெல்லை தூத்துக்குடியில் நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார்
தூத்துக்குடியில் சிலர் தடுத்து பார்த்தனர்.
அதையே குறிப்பிடும் விதத்தில் மக்களுக்கு உதவி செய்யவும் அரசியல் தேவையாயுள்ளது என புதிய கட்சி அறிவிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் நடிகர் பிரசாந்த் திமுக உடன் இணைந்தே வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.



முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தூத்துக்குடிக்கு நேரில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் 


கனமழையில்.. பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பத்து நாட்களுக்கு ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி உள்ள அனைத்து அம்மா உணவகங்கள் முலம் இலவச உணவு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடுகள் செய்திருந்தால் அப்போது தினமும் ஆயிரக்கணக்கான னோர் பசியாற முடிந்தது என்கிறார்கள்
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் இறங்கி உதவி பல செய்தது மெச்சத்தக்கது.

மேற்படி இவர்கள் எல்லாம் தூத்துக்குடி மக்களின் ஆழ் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது.