thoothukudileaks 14-2-2024
photo news by arunan
கனமழை வெள்ளத்திலும்... ஸ்டெர்லைட் வாழ்க கோஷமா ??? !!!
தூத்துக்குடி தகிப்பு!!!
பொங்கல் அன்றும் விட்டு வைக்காத ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு மற்றும் அட்ராசிட்டிகள்.
இது பற்றிய செய்தியாவது:-
கடந்த 2023 டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரத்தனமான கனமழை பெய்து மழை வெள்ளத்தால் மிகவும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்
வீடுகளில் செல்ல முடியாது வெளியில் தான் பொது மக்கள் இருந்தனர் முன்னூறுக்கும் மேற்பட்ட வர்கள் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்திலும் ஆயிரக்கணக்கானோர் திருமண மண்டபம் என தங்கினர்
தண்ணீர் நிறைந்து இருந்ததால்..சிலர் அப் பகுதியில் வெளிவரா இயலாதநிலை அப்போது அவர்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் அரசு தரப்பில் பசியோடு இருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் எதுவும் செல்ல வில்லை.
தன்னார்வ ஆர்வலர்கள் மற்றும் இந்து கோவில்கள் கிறித்தவக் ஆலயம் முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் மத அமைப்புக்கள் மற்றும் தமுமுக,பாஜக சேவா அமைப்புகள் அதிமுக வினர் என ஒருவருக்கு ஒருவர் முந்தியவாறு உணவுகள் வழங்கினார்கள்
அவர்கள் பின்பு நிவாரண பொருட்கள் உதவி செய்தனர்
இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாகனங்கள் முலம் உணவு பொட்டலங்கள் முதலில் பல இடங்களில் முன்னூறு இருநூறு என உணவு வழங்கினார்கள் பின்பு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வாகனங்கள் வரும் போது ஸ்டெர்லைட் வாழ்க வாழ்க கோஷம் போடுமாறு சொன்னார்களாம்
ஒரு சோற்று பொட்டலம் பெறுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை வாழ்க கோஷமா ?
என்ன கொடுமை சார் இது
அரசு தங்கள் பகுதியில் செய்ய வேண்டும் இவர்களை யாரு செய்ய சொன்னது ? உள்ளுர் அமைச்சரா என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வெறுத்து போனார்கள்
என்கிறார்கள்.
தூத்துக்குடியில் திரேஸ்புரம் மற்றும் பல பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வாகனங்கள் நுழைய முடியாமல் ஒட துரத்தி விட்டனர்
தூத்துக்குடியில் இன்னும் அனைத்து பொதுமக்கள் இடம் ஸ்டெர்லைட் ஆலை எதிரான மன நிலை அப்படியே உள்ளது என்பதை காட்டுகிறது.
பார்வை யிட வந்த குழுவுடன் தூத்துக்குடி தேவர் புரம் நடுஞ்சாலையில் சேர் போட்டு அமர்ந்து டீ டைம் அமைச்சர்கள்!!! |
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள் தூத்துக்குடி கீதாஜீவன் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி யாம்
மட்டமான 5 கிலோஅரிசி அரைகிலோ துவரம் பருப்பு தான் டோக்கன் கொடுத்து பல பகுதிகளில் வழங்கியுள்ளார்கள்
பார்வை யிட வந்த நேரு முத்துசாமி மற்ற அமைச்சர்கள் மூட்டை மூட்டையாக சென்னையில் இருந்து வந்த அரிசி பால் பவுடர் ஆயில் எல்லாம் எங்கே போச்சு தெரியவில்லை என்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் ஒட்டு வங்கிக்கு வேட்டு வைத்து விட்டார்கள்
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.கனிமொழிஎம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் பல பகுதிகளில் கனிமொழி எம்பி நேரில் சென்றார் ஒருகட்டத்தில் மழை தண்ணீர் நிறைந்த பகுதிக்கு செல்ல சற்றும் யோசிக்காமல் உடன் பிறப்பு ஒருவர் டூவீலர் பைக் ல பின அமர்ந்து சென்றார் தூத்துக்குடி முன்றாம் மையில் பகுதியில் கனிமொழி எம்பி வந்தவுடன் பொதுமக்கள் பெண்கள் தீடீர் என்று கோபத்தில் அவர் கையை பிடித்து இழுத்து அமைச்சர் தரப்பு தந்த ஒரு பாகஸ்ல இரண்டு இட்லி மட்டும் தான் குழந்தைக்கு கூட பத்தாதும்மா இப்படி செய்யறாங்க என அப் பகுதி பொதுமக்கள் கேள்வி கேட்டதும் அதிர்ச்சி யாகி விட்டார் பின்பு தனி டிராக்கில் உதவி நிவாரண பொருட்கள் அரிசி வழங்கினார்.
பொங்கல் அன்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு தரப்பும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்களும் தங்கள் வீட்டில் வாசலில் கோலம் போட்டு மோதி கொண்டார் கள்.
கடந்த 2024 தைப்பொங்கல் அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என எதிர்ப்பு கோலம் !!!கனமழையில்.. பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பத்து நாட்களுக்கு ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி உள்ள அனைத்து அம்மா உணவகங்கள் முலம் இலவச உணவு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடுகள் செய்திருந்தால் அப்போது தினமும் ஆயிரக்கணக்கான னோர் பசியாற முடிந்தது என்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக