தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
Photo news by Arunan journalist
தூத்துக்குடி : 13.09.2025
தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன் எனத் தெரிவித்தார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“திமுகவை விமர்சிக்க எடப்பாட பழனிச்சாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதலில் அவர் தனது கட்சியை உடையாமல் காப்பாற்றிக் கொண்டால் நன்று. திமுக கூட்டணி உடையும் என்ற அவரது பகல் கனவு ஒருநாளும் நிறைவேறாது,” என்றார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன்
மேலும், இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர்,
“தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் நிச்சயம் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட்டு, மாநில உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பார். தமிழ்நாடு எப்போதும் உரிமைக்காக போராடி வருகிறது. புதிய துணை ஜனாதிபதி அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்,” எனக் கூறினார்.
அதோடு, மணிப்பூர் தேர்தல் நடைபெறவிருப்பதால் தற்போது பிரதமர் அங்கு சென்றிருப்பதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக முதலில் அந்த பிரச்சினையை கிளப்பியபோது பிரதமர் செல்ல தயங்கியதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.
தொடக்கி வைத்த கனிமொழி எம்பி டிமிக்கி கொடுத்த கவுன்சிலர்கள்!!!
தூத்துக்குடி : 13.09.2025
ஏ ஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அம்பேத்கார் நகர் ஸ்டெம்பார்க் மினி திரையரங்கில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஏ ஐ திறன் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய கனிமொழி எம்.பி.,...
“தமிழகத்தில் அனைத்து துறைகளும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. முதன்முதலில் கம்ப்யூட்டர் பாலிசி திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்.
இந்நிலையில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்து பின்னர் முடிவு எடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு ‘ஏ ஐ’ போல் செயல்பட்டவர்.
பலரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுப்பார். அதுபோல், இந்த தொழில்நுட்பத்தையும் எவ்வித தயக்கமின்றி அனைவரும் கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.
ஆனால் எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் இறுதியில் மனித அறிவும் தீர்மானமுமே முக்கியமானது,” என்றார்.கனி மொழி எம்பி
இக் கூட்டத்தில் அடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரிய சாமி ஆணையர் பிரியங்கா ஆகியோர் பேசினர்.
கனிமொழி எம்பி நிகழ்ச்சியை புறக்கணித்த தூத்துக்குடி கவுன்சிலர் கள்!!!!
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஏ ஐ திறன் பயிற்சி இவர்களுக்காக கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி கவுன்சிலர் கள் வராமல் புறக்கணிப்பு செய்தனர். தூத்துக்குடியில் 60 கவுன்சிலர் களில் ஒரு சிலர் மட்டுமே வந்து கலந்து கொண்டனர்.
மாமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, இசக்கிராஜா, சுரேஷ்குமார், நகரமைப்பு உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, உதவி பொறியாளர் சரவணன், நகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், திமுக பகுதி செயலாளர் சிவக்குமார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜெஸ்பர், லிங்கராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடந்து போகும் போது காற்றில் குடை ☂️ பறந்து தரையில் விழுவது போல்!!!
இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது .





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக