தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி மாவட்டம் : விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சக்கம்மாள் புறத்தில் உற்சாகம் நிறைந்த சின்ன மாட்டுவண்டி போட்டி மற்றும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றது.
மொத்தம் ஏராளமான மாட்டுவண்டிகள் பங்கேற்ற இப்போட்டியை, சேகர் ஏற்பாடு செய்திருந்தார். அயிரவன் பட்டியைச் சேர்ந்த முருகேச பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மாட்டு வண்டி ரேஸ் கொடி அசைத்து தொடங்கும் போது..
இந்நிகழ்வில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ரமேஷ், திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பொன் முருகன், ரேக்ளா ரேஸ் மாநில தலைவர் (திருநெல்வேலி வேலங்குளம்) எம். கண்ணன், மதுரை எஸ்.கே.ஆர். மோகன் சாமி குமார் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
பரிசு வென்றோர்:
சின்ன மாட்டுவண்டி போட்டி
- முதல் பரிசு : ஜக்கம்மாள்புரம் மகா பில்டர்ஸ் ரெட்டையாவதி – ரூ.25,000
- இரண்டாம் பரிசு : அழகு, சின்ன மாங்குளம் (வேலங்குளம் எம். கண்ணன்) – ரூ.23,000
- மூன்றாம் பரிசு : சாயல்குடி நளினி கனக பிரியா – ரூ.20,000
- நான்காம் பரிசு : கச்சேரி தளவாய்புரம் தா. ஈஸ்வரன், மீனாட்சி ஈராச்சி வீரபாண்டி பிரதர்ஸ் – ரூ.15,000
பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி
- முதல் பரிசு : நெல்லிக்குப்பம் சீனி பாண்டியன், ரெட்டியாபட்டி – ரூ.22,000
- இரண்டாம் பரிசு : எம். செல்வம், அரசரடி – ரூ.17,000
- மூன்றாம் பரிசு : உசேன் பிரதர்ஸ் (குமரட்டியாபுரம்), எம்.எஸ். கமலா ஜக்கம்மாள்புரம் – ரூ.12,000
- நான்காம் பரிசு : ரவி கண்ணன் (ஏ.எம்.பட்டி), சரவண பிரதர்ஸ் (திருபுவனவாசல்) – ரூ.10,000
மொத்தத்தில் உற்சாகக் களிப்புடன் நடைபெற்ற இப்போட்டியில், கிராமப்புற பாரம்பரிய விளையாட்டின் வண்ணங்கள் உயிர்ப்புடன் பளிச்சிட, பெரும்பான்மையான மக்கள் திரளும் சாட்சியமாக இருந்தது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக