வெள்ளி, 12 செப்டம்பர், 2025

தூத்துக்குடி புதிய பேருந்தில் உள்ளே கொப்பளித்து ஒடும் பாதாள சாக்கடை பயணிகளுக்கு சுகாதார கேடு

வீடியோ பார்க்க 
தூத்துக்குடி மாவட்டம் : 13.09.2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதியுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

 பயணிகள் நடமாடும் வளாகத்தின் நடுப்பகுதியில் பாதாள சாக்கடை கொப்பளித்து ஒடுவதால், பயணிகள் தாண்டி செல்ல முடியாமல் மூக்கை பொத்தி கொண்டு அவலமாக சென்று வருகின்றனர்.

thoothukudileaks
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே பாதாள சாக்கடை தண்ணீர் கொப்பளித்து பயணிகள் நடந்து செல்லும் காட்சி 

thoothukudileaks



பேருந்து நிலையத்தின் உள்ளே எப்போதும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

"மேலும் நுழைவு வாயில் முகப்பு பகுதியில் ஆதரவற்ற முதியோர்கள் அங்கு இருந்து வருகின்றனர் முதியோர்கள் இயற்கை உபாதை சிறுநீர் அங்கு உட்கார்ந்து படியே அசுத்தம் செய்தபடி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது."


இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சுகாதார பாதிப்புகளுக்கு இடமளிக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

thoothukudileaks
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 


மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சம்பந்தப்பட்ட சாக்கடை சீரமைப்பை மேற்கொண்டு, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக