சனி, 13 செப்டம்பர், 2025

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பாதுகாப்பு ஆய்வு

Tamil Nadu updates, photo news by Arunan journalist 


தூத்துக்குடி மாவட்டம் : 13.09.2025

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற தசரா திருவிழா, வருகிற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 03.10.2025 அன்று சூரசம்காரத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.

thoothukudileaks
அருள் மிகு குலசை முத்தாரம்மன் 


இந்த பத்து நாள் திருவிழா நாட்களில், கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளும்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

thoothukudileaks


இதனை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  இன்று (13.09.2025) குலசேகரன்பட்டினம் சென்று பாதுகாப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அவர் கோவில் வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பக்தர்கள் தசன பாதைகள், தசரா குழுவினர் புறப்படும் வழித்தடங்கள், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரைப் பகுதி ஆகியவற்றை விரிவாக பார்வையிட்டு, காவல்துறையினருடன் கலந்தாலோசனை நடத்தினார்.


video 

இந்த ஆய்வின்போது, பெருந்திரளான பக்தர்கள் கூடும் சூழலில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாற்றுச் சாலைகள் பயன்படுத்தப்பட வேண்டும், சாலைகளில் போக்குவரத்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும், பாதுகாப்பு வலையங்களில் கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பு, அவசர மருத்துவ வசதி, தீயணைப்பு படையினர், தன்னார்வலர்கள் ஆகியோரும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

thoothukudileaks


பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் வழித்தடங்கள் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளனவா என்று உறுதிப்படுத்தியும், கோவிலுக்குள் சிசிடிவி கேமராக்கள், கூட்டம் கட்டுப்படுத்தும் தடுப்புகள், அவசர உதவி மையங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு பாஸ்கர், பிரிவு காவல்துறையினர் மற்றும் பலரும் உடனிருந்தனர்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, தமிழகத்தின் முக்கியமான மத-சமூக திருவிழாக்களில் ஒன்றாகும். வருடந்தோறும் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், காவல்துறை மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என பொதுமக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.


👉 இன்று இரவு அவசர போலீஸ் செல் போன் எண் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக