திங்கள், 30 செப்டம்பர், 2024

தூத்துக்குடியில் தவெக மாநாடு ஆலோசனை கூட்டம்

█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-10- 2024 

photo news John posco reporter 

தூத்துக்குடியில் நடிகர் விஜய் தவெக மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

இது பற்றிய செய்தியாவது:-


நடிகர் விஜய் ஆரம்பத்திலுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி யின் முதல் மாநாடு  அக்டோபர் 27 நடைபெறுகிறது .



இதை முன்னிட்டு 

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டியில் அமைந்துள்ள அன்னத்தாய் திருமண மண்டபத்தில் வைத்து இம்மாதம் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற இருக்கும் முதல் மாநாட்டிற்கு திரளாக சென்று வர ஆலோசனை கூட்டம் நேற்று(30-9-2024) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.



  

 இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு பற்றி ஆலோசனை வழங்கினார்கள். 


இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.




 ஆலோசனை கூட்டத்தில் கழகநிர்வாகிகளால் தமிழக வெற்றி கழகத்தின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


உறுதி மொழி!!!

 "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தாரகை மந்திரத்தை சொல்லியும், 

"என் நெஞ்சில் குடியிருக்கும் என்று சொல்லியும்,"

 கழக நிர்வாகிகளில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

2026 ல் நாம தான் வருவோம்!!

 ஆலோசனையில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவுனரும், தலைவருமாகிய தளபதியின் கரத்தை வலுபெற செய்ய வேண்டும், 


  1. வருகிற 2026-ல் தளபதி விஜய் அவர்களை அரியனையில் உட்கார வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.



ஆலோசனை!!!

 அதை தொடர்ந்து பேசிய கழக நிர்வாகிகள் நாம் நம் தாய் கழகத்தில் இணைந்துள்ள நீங்கள் நம் தளபதியின் விருப்பப்படி தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம், நம்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க பழகி கொள்ள வேண்டும்,  


அதே நேரத்தில் நாமும் அதை கடைபிடிக்க முற்பட வேண்டும். பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் ஆகியவை நடைபெறாமல்  காக்க வேண்டும்.


நாம் ஒரு பின் உதாரணமாக இருக்க கூடாது. 



அனைவரும் நம் சகோதரர்கள்!!!

தளபதியின் சகோதர்களாக, சகோதரிகளாக, உறவுகளாக, இருக்கின்ற நம் அனைவரின் கொள்கைகள், கோட்பாடுகளை கடைபிடிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழாவை சிறப்பாக கொண்டாடுவது நம் அனைவருடைய கையில் தான் உள்ளது.


 தளபதி சொன்ன வார்த்தைகளை கடைபிடித்து வாழ முற்பட வேண்டும் என்று ஆலோசனைகள் கூறினார்கள்.


 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளும், தேனீர் தூத்துக்குடி திரேஸ்புரம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழங்கினார்கள்.

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக