வெள்ளி, 5 மே, 2023

தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

 thoothukudileaks 5-5-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது. 



தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் கவுன்சிலர் பேசுகையில்: மாப்பிள்ளையூரணி பகுதிக்கு 5 டிராக்டர் வழங்கிய கனிமொழி எம்.பி.க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள பூப்பாண்டியாபுரம் டி.சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி ஓம்சக்தி நகர் புதிய முனியசாமிபுரம் ஜோதிபாஸ்நகர், நேருகாலனி ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பூப்பாண்டியாபுரம், ராஜபாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியில் மூடி அமைக்காமல் உள்ளன. அதனால் பொதுமக்கள் பாதிப்படையும் நிலை உள்ளது. அதை உடனே செய்ய வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற பணிகளையும் முறைப்படுத்த வேண்டும். செயல்படுத்த இருக்கின்ற பணிகளை முறையாக உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன் கேள்வி எழுப்பினார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில்: செய்கின்ற பணிகளையும், நடைபெற உள்ள திட்டங்களையும் முறைப்படுத்துவோம் என்று தெரிவித்தனர். பின்னர்;, தொம்மை சேவியர் தனது பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். 

ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் பேசுகையில்: அனைத்து பணிகளும் எல்லா பகுதிக்கும் முறைப்படுத்தி, முறையாக நடைபெறும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மாப்பிள்ளையூரணி ஊராட்சி வடக்கு சோட்டையன் தோப்பு, விவேகானந்தர் நகர், வடக்கு சுனாமி காலனி, மேற்கு சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் கிணறு அமைத்தல், அல்லிகுளம், திம்மராஜபுரம் போன்ற பகுதிகளில் போர்கள் மற்றும் மோட்டார் அமைத்தல், தளவாய்புரம், வர்த்தகரெட்டிபட்டி, கூட்டுடன்காடு, குமாரகிரி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற பகுதிகளில் தார் சாலை, பேவர் பிளாக், சிமெண்ட் சாலை உள்ளிட்ட 35 பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளுதல் என மொத்தம் 36 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணி தனுஷ் பாலன், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரி, சண்முகசுந்தரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலெட்சுமி, செல்வராணி, தினகரன், சாந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், பொறியாளர் தளவாய், மேற்பார்வையாளர் முத்துராமன், யூனியன் மேலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக