புதன், 3 மே, 2023

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

 thoothukudileaks 4-5-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்..



இதுபற்றி செய்தியாவது:-

     தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் மேயர் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றன, இந்நிலையில் டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.


 மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், ஜோஸ்பர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


    பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்யாத காரணத்தால் எதிர்பாராத வகையில் கூடுதலாக மழை பொழிவு ஏற்பட்டதால் கடந்த காலத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி சில பகுதிகளில் மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது.


 இதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தூத்துக்குடிக்கு வருகை தந்த தளபதி, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். 


ஆட்சிக்கு வந்த பிறகும் பார்வையிட்டு சிறப்பு நிதிகள் ஓதுக்கப்பட்டு கழிவுநீர் செல்வதற்கு தேவையான பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணிகள் மாநகராட்சி முழுவதும் முழுமையாக நடைபெற்று வருகின்றன. 


இனி மாநகர பகுதிகளில் மழைகாலங்களில் எங்கும் தண்ணீர் தேங்காது, அந்த அளவிற்கு நாங்கள் புதிதாக பொறுப்பேற்ற பின்பு மக்களுக்கு என்ன பணிகள் அவசியம் என்பதை ஆய்வு செய்து அதில் முதற்கட்டமாக அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்பதை கணக்கீல் எடுத்துக்கொண்டு அப்பணிகளை செய்து வருகிறோம். தொடர்ந்து படிப்படியாக மாநகராட்சி முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம். நாங்கள் கடமைக்கு பணியாற்ற மாட்டோம் கடமை உணர்வோடு பணியாற்றுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக