செவ்வாய், 11 அக்டோபர், 2022

தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் 11-10 2022 இன்று 4 மணியளவில் நடைபெற்றது.




இது பற்றிய செய்தியாவது -

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் இன்று 11-10-2022 நடைபெற்றது.

 அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கைக நல்லிணக்கத்தை பாதுகாக்க  மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தில் பல லட்சம் பேர் பங்கேற்றனர்.



 கி.வீரமணி, திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..



 மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினை வாதிகளை ஒருபோது அனுமதிக்கமாட்டோம் என்று கோஷம் எழுப்பினர். 

சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் பழைய பேரூந்து நிலையம் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி அருகே இருந்து அன்னை ஜூவல்லர்ஸ் அருகே மனித சங்கலி நீண்டிருந்தது. இதில் மேற்குரிய கட்சி தொண்டர்கள் இஸ்லாமிய மகளிர்கள் அதிகமாக  கலந்து கொண்டனர்.





தூத்துக்குடி மாநகரில் மனித சங்கிலி மாலை 4 மணி இருந்து 5 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி  நிகழ்ச்சியின் போது ...அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படாமல் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடைபெற்றது.

தூத்துக்குடி காவல்துறை DSP சத்தியராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக