thoothukudileaks 29-5-2023
கோமாளி ஆட்சி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தூத்துக்குடி யில் இன்று (29-5-2023) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசினார் .
இதுபற்றிய செய்திதாவது:-
தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் (29.05.2023) இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி 12வாசல் மையவாடி எதிரான மைதானத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பேசிய தாவது:-
தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் இந்த கடும் வெயிலும் பொருட்படுத்தாமல் திரளாக கலந்த கொண்ட அதிமுகவினர் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
இந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறி போச்சு கள்ளச்சாராயம் கஞ்சா போதைப்பொருள் அதிகளவில் கிடைக்கிறது
சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு விஏஒ படுகொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தினருக்கு ஒருகோடி கொடுக்குது இருண்ட ஆட்சி மணல்கொள்ளையர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வில்லை .
அதுபோல கள்ளச்சாராயம் வியாபாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்
தமிழகத்தில் டாஸ்மாக் கடை யில் குடித்தவன் சைனடு கலந்து குடித்தாக போலீஸ் சொல்கிறது
இதை சொல்ல ஒரு டிஜிபி .
வேற யாரும் சொல்ல வில்லை?ஸ்டாலின் ஆட்சி யில் மூப்பதாயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக திமுக அமைச்சர் பிடிஆர் சொல்றாரு ?
அவரு என்ன தப்பாவா சொல்லுவாரு அவரை அமைச்சர் பதவி விட்டு ஒரேயடியாக நீக்க முடிந்ததா? வேற துறை க்கு தகவல் துறை க்கு மட்டுமே மாற்ற முடிஞ்தது.
அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் உண்மையை சொல்லிபுடுவார் என பயம்
அதேபோல் அன்று இதே ஸ்டாலின் செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டு களை கூறினார்
இன்று அதே செந்தில் பாலாஜி க்கு வருமானம் கொழிக்கின்ற மின்சாரம் 🍷 மது விலக்கு ஆயத்தீர்வை துறை கொடுத்து அழகு பார்க்கிறார்கள்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது இன்று முதல்வரோ ஜப்பான் சென்று விதவிதமாக போட்டோ போஸ் கொடுத்து வருகிறார்.
இன்றைக்கு ஆட்சி யில் செந்தில் பாலாஜி க்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது அடிமைகளாக .உதயநிதி சபரீசன் கனிமொழி உட்பட மாறி விட்டார்கள்.
மின்சார கட்டணம் சொத்து வரி குடிநீர் கட்டணம் விலைவாசி எல்லாம் திமுக உயர்த்தி விட்டது
டாஸ்மாக் கடைகளை திமுக வின் பினாமிகள் தான் நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து 22பேர் செத்துட்டாங்க அவங்களுக்கு பணம் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் கள்ள சாராயம் காய்ச்சும் வியாபாரி க்கும் ஊக்க தொகை கொடுக்கிறார் ஸ்டாலின்
என்னத்த சொல்ல!!!இன்னைக்கு கோமாளி ஆட்சி பொம்மை முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக