thoothukudileaks 28-5-2023
விருகம்பாக்கம் ,சென்னையில் பெண் போலீசை 🍷 தாக்கியதாக புகார்: பாஜக நிர்வாகி தூத்துக்குடி முன்னாள் மேயர் சசிகலா புஷ்பாவின் மகன் கைதுசெய்யப்பட்டார் .
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி முன்னாள் மேயரும் முன்னாள் எம்பியும் பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதிப்ராஜ்.
இவர் சென்னை விருகம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார.
அப்போது போலீஸ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரை சோதனையிட நிறுத்தினார்கள்.
அப்போது பிரதிப் ராஜ் ,
அந்த பெண் காவலரை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவர் மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
எனவே போலிசார் வழக்கு பதிவு செய்து பிரதிப் ராஜை கைது செய்தனர்
.ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்ததால் அவரை வீட்டிற்கு அனுப்பிய போலிசார் மீண்டும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக