ஞாயிறு, 16 மார்ச், 2025

சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 Tamil Nadu updates 17-3-2025

தூத்துக்குடி லீக்ஸ் – வணிகச் செய்தி

சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, மார்ச் 16, 2025 – மே 17 இயக்கத்தின் சார்பாக இன்று சென்னை சைதாப்பேட்டை திறந்தவெளி திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனர் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு தமிழர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.



இவ்விருதை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வழங்க, பேரவையின் மாநில தலைவர் S. சௌந்தரராஜன் (ராஜா) மற்றும் மாநில பொதுச் செயலாளர் V. மெஸ்மர்காந்தன் வெள்ளையன், சுதேசி நாயகனின் மகள்கள் அனு பாரதி மற்றும் அர்ச்சனா தேவி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

விழாவில், திருமுருகன் காந்தி அவர்களும், பேரவையின் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரும் த.வெள்ளையன் அவர்களின் தமிழ் மீது கொண்ட பற்றையும், வணிகர்களை ஒருங்கிணைத்து பாதுகாத்த பணியினையும் பாராட்டி புகழஞ்சலி செலுத்தினர்.

வீடியோ பார்க்க 

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில அமைப்பாளர் L.M. டேவிட்சன், செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணலி சண்முகம், விழுப்புரம் மாவட்ட தலைவர் செஞ்சி கண்ணன், பழம்பொருள் அணித் தலைவர் பூவை ஜெயக்குமார், மத்திய சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகி செல்லப்பாண்டி, கமலக்கண்ணன், சுரேஷ், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, த.வெள்ளையன் அவர்களின் பெயரைச் சுமக்கும் வகையில், அவர் வாழ்ந்த இல்லத்தின் அருகிலுள்ள சாலைக்கு "வெள்ளையன் சாலை" என்று பெயரிட அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

- A. ஆல்பர்ட் அந்தோணி

மாநில செய்தி தொடர்பாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை


 தகவல் செய்தி 

தெர்மல் ராஜா  மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் 

தூத்துக்குடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக