#தூத்துக்குடி: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
தூத்துக்குடி, மார்ச் 16: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தின் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கனி மஹாலில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கௌரவிக்கப்பட்டு, நினைவு கேடயம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் விஜயராகவன் தலைமையேற்று அவர் பேசியதாவது
எம்.ஜி.ஆர் அவர்களின் மக்கள் சேவை மற்றும் திரைப்படத்துறையில் அவருடைய தாக்கத்தை விவரித்தார்.
வரவேற்புரை சத்யா இலெட்சுமணன், நிகழ்த்தினார்.
மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளான மிக்கேல் மற்றும் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்டி சேலை ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் தையல் இயந்திரம் குக்கர் அரிசி பை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் தனது உரையில், எம்.ஜி.ஆர் அவர்களின் சமூக நலப்பணிகளையும், அரசியல் பங்களிப்பையும் பாராட்டி பேசினார்
பின்னர் மூத்த எம்ஜிஆர் ரசிகர்களை கெளரவித்து நினைவு கேடயம் வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன்.
நெல்லை-தூத்துக்குடி முன்னாள் செயலாளர் பாலகிருட்டிணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், பெருமாள்சாமி, தங்கமாரியப்பன்,தொப்பை கணபதி, ராமகிருஷ்ணன், குமாரவேலு, பாலசிங்கம்,ரவிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் சத்யா இலெட்சுமணன் மற்றும் பொன்னம்பலம் மிக்கேல் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக