தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்
தூத்துக்குடி: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்.பி. மாரியப்பன் மற்றும் பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளன. இதனிடையே, கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளை மீறிய காரணத்தினால், அவர்கள் இருவரும் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை கட்சியின் கட்டுப்பாட்டையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக