சனி, 27 மே, 2023

ஆன்லைனில் வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்கலாம் என இணையதளத்தில் வரும் முதலீடு சம்மந்தமான விளம்பரங்கள், இணைப்புகள் (Link) போன்கால்கள், வாட்ஸ்அப் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம். மோசடியாளர்களிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டம் :27.05.2023


ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என போலி விளம்பரங்கள் நம்பி மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-


ஆன்லைனில் முதலீடு செய்தல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் TATA Investment Company என்ற பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களிடமிருந்து சுமார் ரூபாய் 41,05,949/- (நாற்பத்தொரு இலட்சத்து ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஓன்பது) மோசடி செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலைய போலீசாரால் சம்பந்தப்பட்ட 5 எதிரிகளை நாட்டின் 5 மாநிலங்களில் இருந்து கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


 இவ்வழக்கில் ஒரு எதிரியின் வங்கி கணக்கில் சுமார் 14 கோடிக்கு மேல் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.


எனவே வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க நினைக்கும் பெண்கள், ஆன்லைனில் ஏதாவது முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாமா என ஆன்லைனில் வேலை தேடும் வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.


 இணையதளத்தில் வரும் முதலீடு சம்மந்தமான விளம்பரங்கள், இணைப்புகள் (Link) போன்கால்கள், வாட்ஸ்அப் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம்.


 மேற்கண்டவைகளை நம்பி முதலீடு செய்யும் போது முதலில் சிறிதளவு இலாபம் தருவதுபோல் குறைவான பணத்தை உங்களுக்கு கொடுத்து உங்கள் ஆசையை தூண்டிவிட்டு பெறிய அளவில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றும் கும்பல் வலைதளங்களில் வளம்வருகிறது. 


மேலும் பெரிய நம்பத்தகுந்த நிறுவனங்களின் பெயர்களில் போலியாக இணையதளங்களை உருவாக்கி உங்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்யப்படுகிறது.


 எனவே இதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக