தூத்துக்குடி புதுபஸ்ஸடாண்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஹோட்டல் உரிமை யாளரை அடித்து தாக்கி விட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளது இதனால் பஸ் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாபாரி சங்க நிர்வாகிகள் |
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று( 27-5-2023) இரவு 7 மணி அளவில் ஓட்டலில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்ததாகவும் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டு கடை உரிமையாளர் சுந்தரை அடித்து தாக்கியுள்ளனர்.
அதை தடுக்க வந்தவர் மீதும் அடித்து காயப் படுத்தினர் ஹோட்டல் பொருட்களை வீசிஎறிந்து சேதப்படுத்தி உள்ளார்கள்.
பிறகு கடை உரிமையாளர் சுந்தர் க்கு ஜந்து பேரும் கொலைமிரட்டல் விடுத்து சென்றதாக கூறுகின்றனர்.
புதிய பேருந்து நிலையம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு உருவானது.
இவ்விஷய மறிந்து புதிய பேருந்து நிலையம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்
இந்த பிரச்சினையை தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இளைஞர் அணி அமைப்பாளர் சொ.ராஜா தகவல் தந்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜா காவல்துறையினரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.
தற்போது இது தொடர்பாக அதிரடி யாக உடனே தூத்துக்குடி காவல்துறை தப்பியோடிய இருவரை கைதுசெய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக