புதன், 22 மே, 2024

செத்த பாம்பு ஸ்டெர்லைட்டை அகற்றுங்கடா ? இன்னும் என்ன தாமதம் கொலைகார பாவிகளுக்கு தண்டனை என்னாச்சு ? ஓங்கி ஒலித்த தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆறாம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த போராளிகளுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வில் பரபரப்பு

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

22-5-2024

photo news by 

arunan journalist 

ஸ்டெர்லைட் ஆலை செத்து போன பாம்பு தானா இல்லை உஸ் என மீண்டும் சீறுமா ? செத்த பாம்பு அகற்றுங்கள்??? இன்னும் என்ன தாமதம் செய்றீங்க?? 

கொலைகார பாவிகளுக்கு தண்டனை வழங்குங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போலீஸ் துப்பாக்கி சூடு 16உயிர் நீத்த தியாகிகள் வீரவணக்கம் 6 ம ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார் கள்




இது பற்றிய செய்தியாவது;-


தூத்துக்குடி மாநகர் முழுவதும் முடப்பட்ட நாசகார ஆலையான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த 2018- மே 22-ல் ஈவு யிறக்கமின்றி காவல்துறை துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது 

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை அடித்தார்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பேர்களை தூக்கி சென்று சித்திரவதை செய்து துன்புறுத்தி வழக்குகளும் பதிவு செய்தது

அன்று போலிஸாரின் துப்பாக்கி சூடு

ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நிகழ்த்துவதா ?என கொந்தளிப்பு ஏற்பட்டது 

உலக முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பேசும் பொருளாகி வேதனை தந்தது.


இதில் தூத்துக்குடி மக்களுக்காக அன்று போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 


 தங்கள் இன்னுயிரை நீத்தார்கள் 

16 போராளிகள் 

 அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் இன்று ஓங்கி ஒலிக்கப்பட்டது.


  இன்று 22-5-2024 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் 


இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி அக்கா பேராசிரியர் பாத்திமா பாபு தலைமையில் திரேஸ்புரம் தாழை முத்து நகர் சவரியாபுரம், அம்பேத்கர் நகர், பண்டாரம் பட்டி கிளியோபாட்ரா தியேட்டர் சாலை என பல்வேறு இடங்களில் நினைவு அஞ்சலி செலுத்தினர் 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய சங்கம் தலைவர் விநாயகமூர்த்தி, சமத்துவக் மக்கள் கழகம் மாலை சூடி அற்புத ராஜ், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருள் சுரேஷ் குமார் விசைப்படகு சங்கம் ரீகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிதர்பிஸ்மி,சங்கு குளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கி முத்து, வழக்கறிஞர்கள் அதிசய குமார், மாடசாமி, மற்றும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கம் மாநில துனை செயலாளர் அம்ஜத்,

திரு இருதய நண்பர்கள் இயக்க தலைவர் பிரின்ஸ், ஜெரால்ட், கனிஸ்டா, தமிழக வெற்றி கழகம் ஜெகதீஸ்வரன், மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்த போன பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளும் கண்ணீர் சிந்திய வாறு கலந்து கொண்டனர் 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 

செத்த பாம்பு ஸ்டெர்லைட்டை அகற்றுங்கள் இன்னும் என்ன தாமதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் 

துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொலைகாரர்களுக்கு தாமதிக்காமல் தண்டனை வழங்குங்கள் என 

பரபரப்பாக பேசினார்.

இன்று துப்பாக்கி சூடு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஷ்டிக்க படுவதை முன்னிட்டு காவல்துறை யினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 

தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலைகள் தெருக்கள் போலிசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டு இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக