thoothukudileaks 24-12-2023
Arunan journalist
வாங்காதீர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் நிவாரண பொருட்களை என தமிழர் விடியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
நீங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளும் ஸ்டெர்லைட் காரன் மக்களோடு மக்களாக கலப்பதற்கு நிவாரணப் பொருட்களை கொடுக்க வருவான் தயவு செய்து அவர்களை விரட்டியுங்கள். என்று தூத்த்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு தமிழர் விடியல் கட்சி சார்பில் பரபரப்பு வேண்டுகோள்
இது பற்றி தமிழர் விடியல் கட்சி சேமா சந்தனராஜ் பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மண்ணை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கிய மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் படுகொலை நடந்த இடம் தூத்துக்குடி மண்.
ஸ்டெர்லைட் ஆலை யை தூத்துக்குடியை விட்டு நிரந்தரமாக அகற்ற வேண்டும்
தூத்துக்குடி மண்ணை, மக்களை, நீர் நிலங்களை காப்பாற்றுவதற்காக போராடிய போராட்டத்தால் 15 உயிர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இது உலகம் இருக்கும் வரை மறைக்கவும் மறக்கவும் முடியாத ஒரு துயர் சுவடு.
தற்போது தூத்துக்குடி மாவட்டம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை யினர் அது ஸ்டிக்கர் ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும்.
தூத்துக்குடி மக்களை மடைமாற்றி மீண்டும் ஸ்டெர்லைட் திறப்பதற்கு நிவாரண பொருட்கள் மூலமாக கொடுத்து வருகிறது
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சிதறி நிவாரண பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.
ஆங்காங்கே தோழர்கள் இது சம்பந்தமாக ஸ்டெர்லைட் காரன் நிவாரண பொருட்களை கொடுத்து வருகிறான் நாங்கள் ஆங்காங்கே விரட்டிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது
தூத்துக்குடியில் இன்று 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் எங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ஒரு படையுடன் வந்து நிவாரண பொருட்கள் உடன் மக்களுக்கு வலை வீசினார்கள்
அதில் பாரதிய ஜனதா போர்வையுடன் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல செயலாளர்கள் பொறுப்பாளர்கள் வந்ததாக என தெரிவிக்கிறார்கள்
அவர் களிடம் தமிழர் விடியல் சார்பில் பேசினோம்
நீங்கள் பாரதிய ஜனதா கட்சியோ, அதிமுக, திமுக கட்சியோ உங்கள் கட்சி பெயரில் நிவாரண பொருட்கள் கொடுங்கள்
ஆனால் ஸ்டெர்லைட்டுக்காரன் கொடுக்கின்ற நிவாரண பொருட்களை கொண்டு வந்து கொடுக்கக் கூடாது என்று தமிழர் விடியல் கட்சி சார்பில் அப்பகுதியில் தடுத்து நிறுத்தி அப் பகுதி வாசிகள் புறக்கணித்தனர்.
இதனால் திரும்பி சென்றனர் .
மக்களுக்கு நான் சொல்லக்கூடிய செய்தி என்னவென்றால்,
இதே போல் நீங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளும் ஸ்டெர்லைட் காரன் மக்களோடு மக்களாக கலப்பதற்கு நிவாரணப் பொருட்களை கொடுக்க வருவான் தயவு செய்து அவர்களை விரட்டியுங்கள்.
இந்த மண்ணை காப்பதற்காக 15 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள்
அவர்களுக்கு நாம் செய்யும் கடமை நாம் செய்யும் வணக்கம் அதுவாகத்தான் இருக்கும்.
பரிபூரண உயிரை நம்மால் கொடுக்க முடியாது.
ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக படுகொலை செய்யப்பட்டார்களோ அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டும்.
ஆகையால் பொதுமக்கள் ஸ்டெர்லைட் தரப்பில் வருகின்ற நிவாரண பொருட்களை தயவு செய்து வாங்கி விடாதீர்கள்
அவனுடைய பொருட்களை வாங்கி தான் நாம் வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் இந்த நேரமே உயிர் விட தயாராக இருக்க வேண்டும் .
அன்பு மக்களே தயவு செய்து ஸ்டெர்லைட் கொடுக்கின்ற பிச்சை நிவாரணத்தை தயவு செய்து வாங்காதீர்கள் வாங்காதீர்கள் என தெரிவித்து உள்ளார்
சேமா. சந்தனராஜ் பாண்டியன்
தமிழர் விடியல் கட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக