ஞாயிறு, 24 டிசம்பர், 2023

ஏரல் கோட்டை காடு கிராமத்தில் பேரழிவு கண்டு கொள்ளாத தமிழக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர இருப்பதாக வழக்கறிஞர் கிறிஸ்டோபர் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா கோட்டைக்காடு  கிராமம் தமிழக அரசாலும் அதிகாரிகளும் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட ஒரு கிராமமாக இன்று வரை இருக்கின்றன 



இதுவரை வெள்ள பாதிப்பே சந்தித்திராத அந்த கிராமம் பனிரெண்டாம் தேதியே வெள்ள அபாயம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டும் தூத்துக்குடி மாநகரத்திற்கு 17ஆம் தேதியே வெள்ளம் வந்த பின்பும்  அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் 18ஆம் தேதி மாலை 7 மணிக்கு கோட்டைக்காடு கிராமத்திற்கு பேரழிவு ஏற்பட்டது 

வழக்கறிஞர்கள் இடம் அங்கு உள்ள மக்கள் கோரிக்கை மனு வழங்கும் போது எடுத்த புகைப்படம் 


இந்த உண்மை வெளி உலகத்திற்கு தெரியக்கூடாது என்பதால் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட கிராமமாக கோட்டைக்காடும் அதை சுற்றியுள்ள கிராமங்களும் மாறி உள்ளது

 கோயம்புத்தூரில் இருக்கும் கோட்டைக்காடு தொழிலதிபர் சொர்ண ஜெகன் மூலம் இந்த தகவல் வெட்ட வெளிச்சமாகி உள்ளது

 சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களுடன் சொர்ண ஜெகன் கோட்டைக்காடு  சென்றார்  


மேலும் அவரது கோரிக்கையின் படி  உண்மையை தமிழகம் மக்கள் அறிய செய்ய  நேற்று 24-12-2023 வழக்கறிஞர்கள்  கிறிஸ்டோபர் தலைமையில் சென்று மக்களிடம் கோரிக்கை மனு பெற்று தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் பதிவு செய்ய போவதாக தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக