thoothukudileaks 22-1-2023
News by arunan
தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக இன்று நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் (22-1-2023) இன்று காலை 10 மணி அளவில் ராசி மஹாலில் வைத்து நடைபெற்றது
இக் கூட்டத்திற்கு தேசிய குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு தலைமை வைத்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் மாவட்ட பொருளாளர் நவமணி முன்னிலை வகுத்தார்கள். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்பு உரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01 ) தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தில் புதிய உறுப்பினர்கள் அதிகப்படியாக சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
02 )
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் மீண்டும் இயக்க அரசு அனுமதிக்க கூடாது என்று மாநில அரசினை தூத்துக்குடி மக்கள் சிவில் உரிமை கழகம் வலியுறுத்துகிறது.
03 ) ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு உடனடியாக மே 22, 2018 ல் நடந்த துப்பாக்கி சூட்டில் வரையறை மீறிய காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மேலும் பல தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக