வியாழன், 4 ஜனவரி, 2024

ஒட..ஒட ஸ்டெர்லைட் வாகனம் திரேஸ்புரம் பகுதியில் மக்கள் விரட்டியடிப்பு

thoothukudileaks4-1-2024

news by arunan journalist 


ஒட..ஒட தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வாகனம் திரேஸ்புரம் பகுதியில் மக்கள் விரட்டியடிப்பு பரபரப்பு 



இது பற்றிய செய்தியாவது:-

 2023டிசம்பர் 17 பெய்த கனமழை காரணமாக கடந்த சிலநாட்களாக...

வெள்ள நிவாரண தருகிறோம் என சோற்று பொட்டலம் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி பார்வையில் தெரிய வேண்டும் என அவர் குடியிருப்பு குறிஞ்சி நகர் என சில பகுதிகளில் மட்டுமே சுற்றி சுற்றி  நிவாரண பொருட்கள் வழங்கி வந்தனர்.

இந்நிலையில்...

 ஸ்டெர்லைட் வாகனம் திரேஸ்புரம் பகுதியில் விரட்டியடிப்பு



ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி விட்டு நிரந்தரமாக அகற்ற வேண்டும் என  நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி யால் சுட்டு 16 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியாகவும் பாதிப்பு வழக்குகள் என அல்லாடினார்கள்

இதை தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் எவரும் மறக்கவில்லை என தெரிய வருகிறது .

அதன் உண்மையான வெளிப்பாடு ஸ்டெர்லைட் ஆலை கொண்டு வந்த நிவாரண பொருட்கள் பொதுமக்கள் ஏற்க மறுத்து விரட்டியடிப்பு சம்பவம் பல இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

 


இன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாகனம் (04.01.24) மதியம் 2.30 மணியளவில் வெள்ள நிவாரண பொருட்கள் தருகிறோம் என்ற போர்வையில் மக்களை பிளவுபடுத்தி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திரேஸ்புரம் பகுதிக்கு வந்தது. 


அதனை பார்த்த திரேஸ்புரம் பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஓட ஓட விரட்டினர். இனிமேல் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக