வியாழன், 4 ஜனவரி, 2024

தூத்துக்குடி அதிமுக வில் சலசலப்பு எடப்பாடியார் அறிவித்த புதிய நிர்வாகிகள் அதிருப்தியா !!! அடுத்து எம்பி வேட்பாளர் இவர்கள் தானா!!! அதிமுக வில் குமுறல் பொது செயலாளர் எடப்பாடியாருக்கு பெட் ன்ஷன் அனுப்பி வைத்து வருகிறார்கள்

தூத்துக்குடி அதிமுக வில் சலசலப்பு 

எடப்பாடியார் அறிவித்த புதிய நிர்வாகிகள் அதிருப்தியா !!! 

அடுத்து எம்பி வேட்பாளர் இவர்கள் தானா!!! அதிமுகவில் குமுறல் வெடித்து உள்ளது .பொது செயலாளர் எடப்பாடியாருக்கு  

பெட்டிஷன் அனுப்பி வைத்து வருகிறார்கள்



கடந்த வாரம் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டத்தில் புதிய கட்சி பொறுப்பு அறிவித்தார்

மாநில எம்ஜிஆர் மன்றம் துனை செயலாளர்  ரா ஹென்றி

மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துணை செயலாளர் தா பிரபு


இருவருமே  மாற்று எதிர் கட்சி யில் இருந்து வந்தவர்கள் அதிமுக வுக்கு வந்து சில  காலத்திலே கட்சி பதவியா ? அடுத்து 

எம் பி சீட் வேட்பாளர்கள் இவர்கள் தானா‌? என்று  அதிமுக கட்சியிலே இருந்து வரும் எங்களுக்கு என்ன இருக்கிறது எடப்பாடியார் என்று புகார்களாக அனுப்பி வருகிறார்கள்

சிலர் எம் பி வேட்பாளர்சீட் தங்களுக்கு கிடைக்குமா என அச்சத்தில் கதற தொடங்கி உள்ளார்கள் அதனால் ஒவ்வொருவரும் கடிதம் அனுப்பி கொண்டு இருக்கிறார்கள்.

 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல் காய்ச்சல் தான் அதிமுக தரப்பில் 🔥 தீயாய் பற்றி வருகிறது


ரா ஹென்றி

முதலில் பாக்யராஜ் ரசிகர் மன்றம் நடத்தியவர் அப்புறம் அதிமுக  பின்பு அதிமுக தோல்வியடைந்ததும் காங்கிரஸ் கட்சி இனைந்து மாநில சிறுபான்மை பிரிவு அதிமுக வுக்கு எதிராக செயல் பட்டார் பின் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி பிடித்ததும் மீண்டும் அதிமுக வில் சேர்ந்தார்

ஜெ மறைவுக்கு கட்சி உடைந்ததும் தினகரன் கட்சி தாவி தூத்துக்குடி அமமுக மாவட்ட செயலாளர் ஆகி அதிமுக எதிராக தூத்துக்குடியில் இருந்தார்


இந்த நிலையில் அமமுக கட்சி தலைவர் தினகரன் இவரின் ஆக்டிவ் காரணமாக ஹென்றி மாசெ பதவி பறித்தார் அதை வேறு ஒருவருக்கு வழங்கி டம்மி ஆக்கி கட்சியில் வைத்திருந்தார்

இதனால் மீண்டும் சமீபத்தில் அதிமுக வில் வந்து இனைந்து கொண்டார் 


அதேப்போல பிரபு 

இவர் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக இருந்தவர்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இவர் வகித்த மாசெ பதவி யை பறித்து வேறொருவருக்கு வழங்கியதும் நாம் தமிழர் கட்சி யை விட்டு விலகினார்

பின்பு  அதிமுக வில் இணைந்தார்.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக வில் அமைதியாக இருந்தவர்கள் கடந்த ஐந்து மாதங்களாக சுவர்கள் விளம்பரங்கள் பேனர்கள் வால் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள்


அதிமுக வில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே மாற்று கட்சி யில் இருந்து வந்தவர்களுக்கு உடனே கட்சி பதவி பொறுப்பு அளிக்காமல் அதிமுக கட்சியிலே தொடர்ந்து ஐந்து வருடங்கள் சென்ற பின் தான் கட்சி பதவி கொடுப்பதை வழக்கமாக கையாண்டார்கள் என அதிமுக வினர் புலம்பி வருகின்றனர்

இவ்வாறெல்லாம் 

அதிமுக கட்சி பொது செயலாளர் எடப்பாடியாருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன்  தங்களுக்கு எம் பி வேட்பாளர் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து அதிமுக வில் தீவிர பணியாற்றி வருகிறார்

அடுத்து முன்னாள் அதிமுக எம் பி நட்டர்ஜி தனது மகன் சாம் நட்டர்ஜி க்கு சீட் கேட்டு வருகின்றனர் என்கிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக