வெள்ளி, 5 ஜனவரி, 2024

தூத்துக்குடி வெள்ள நிவாரண பணியில் களத்தில் செயல்பட்ட நான்காவது வார்டு பெண் கவுன்சிலர் நாகேஸ்வரி க்கு பொதுமக்கள் பாராட்டு

thoothukudileaks

photo news by anbarasan BA

கடந்த2023 டிசம்பர்17 தேதியன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பெய்த அசுரத்தனமான கனமழை யில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மூழ்கி மழை வெள்ளம் பெருக்கெடுத்தது

அமைச்சர் கீதாஜீவன் உடன் தூத்துக்குடி 4- வது வார்டு கவுன்சிலர் நாகேஸ்வரி 


 சாலையிலும் குடியிருப்பு வீடுகளிலும் உள்ளே மழைநீர் மூழ்கியவாறு தெப்பமாக தெருக்களில் நின்ற தால் பொதுமக்கள் ரொம்பவே தவித்தனர் 

அப்போது தமிழக அரசு துரிதமாக வெள்ளநீர் அகற்ற அரசு இயந்திரம் வேகமாக செயல்பட வைத்தது 

அதற்கான அமைச்சர் நேரு உடனே வந்து பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார் தூத்துக்குடி எம்பி கனிமொழி  களத்தில் மக்களோடு இருந்தார்

அடுத்து தொகுதி அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கலெக்டர் லட்சுமிபதி ஆனையர் தினேஷ் குமார் ஆகியோர் இரண்டு முன்று நாட்களும் தூங்காமல் இரவிலும் துரிதமாக பணியாற்றினார்கள் .

மேயர் ஜெகன் பெரியசாமி உடன் தூத்துக்குடி 4- வது திமுக கவுன்சிலர் நாகேஸ்வரி 


இதில் தூத்துக்குடியில் மாநகராட்சி பல வார்டுகளில் சில ஆண் மற்றும் குறிப்பாக பெண் கவுன்சிலர்கள் பொதுமக்கள் சந்திக்கவே இல்லை பதில் சொல்லவோ ஆறுதல் தெரிவித்து உடன் இருக்கவோ செய்யாமல் தலைமறைவானார் கள் என்பது வேதனை யான விஷயம் மழைநீர் கட்டுக்குள் வந்து அரசு நிவாரண பொருட்கள் பொருட்கள் வழங்கும் போது பெண் கவுன்சிலர்கள் கணவர்கள் வேண்டியவர்களுக்கு பெற்று கொள்ள தலைகாட்டினர் அவர்களுக்கு அள்ளி எடுத்து செல்ல வந்தார்கள் .

ஆனால்?

தூத்துக்குடி  வெள்ள நிவாரண பணியில் சிறப்பாக செயல்பட்ட நான்காவது வார்டு பெண் கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 4- வார்டு திமுக கவுன்சிலர் நாகேஸ்வரி பாஸ்கர் 


தூத்துக்குடி நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி பாஸ்கர் அன்றிரவு இருந்து களத்தில் மக்களோடு நின்றார்.




அடுத்து  நிவாரண பணியின் போது இரவு பகல் பாராமல் தண்ணீரை வெளியேற்றுவதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதிலும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர்,பெண்கள் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் முழுகவனத்துடனும்  நடந்து கொண்டவிதம் வார்டு மக்களை வெகுவாக கவர்ந்தது.





இவருடைய இடைவிடாது பணியை பார்த்து அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நீ சற்று ஓய்வெடுத்து பணி செய் என்று சொல்லியுள்ளார் 

இரவில் நிவாரணபணி ரோந்து வந்த மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் இவரது இடைவிடாத பணியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக