சனி, 30 டிசம்பர், 2023

ஆயிரம் ரூபாய் வாங்க மறுத்து தருவைகுளம் கிழக்கு கடற்கரையில் சாலை மறியல் !!! பொதுமக்கள் உடன் கழக மாநகர செயலாளர் ஏசாதுரை பங்கேற்பு !!! ரூபாய் 6 ஆயிரம் வேண்டும் என தருவைக்குளம் கயத்தாறு புதிய முத்தூர் என தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவை குளம் பகுதியில் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசால் வழங்கப்படும்  ரூபாய் 6000 வழங்காமல் வெறும் ஆயிரம் மட்டும் வழங்கி வருகிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் திமுக அரசை கண்டித்து நேற்று (29-12-2023) பொதுமக்கள்  சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை
அப் பகுதியில் குவிந்த போலீசார் 

வீடியோ பார்க்க
தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலைமறியல் பொது மக்கள் உடன் அமர்ந்த கழக மாநகர செயலாளர் ஏசாதுரை 





இதில் கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ் ஆணையின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை  கழக நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு  ஆதரவாக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தருவைகுளம் இடிந்து விழுந்த வீடுகள் 


இப் பகுதியில் 2300 குடியிருப்புகள் உள்ளன இதில்  பல வீடுகள் கனமழையால் அன்றைய தினம் இடிந்து விட்டது 

கால் நடைகள் பாதிப்பு இப்படி பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உரிய  நிவாரண தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என பேசினார் மாநகர செயலாளர் ஏசாதுரை கோரிக்கை வைத்தார்.


இதே போல் தூத்துக்குடி மாவட்டம் புதிய முத்தூர் கயத்தாறு பகுதி மக்களும் அரசு தரும் ஆயிரம் வாங்கவில்லை 6 ஆயிரம் தர வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் நேற்று ஆயிரம் வாங்க மறுத்து தங்களுக்கு 6ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல் செய்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக