thoothukudileaks 18-4-2023
photo news by arunan
ஸ்டெர்லைட் காரன் என்னை நல்லா ஏமாற்றி விட்டான்!!! ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை ஜய்யய்யோ என்னோட பணம் வாங்கி தாங்கள் ஜயா ஸ்டெர்லைட் ஆலை மீது பகீர் குற்றச்சாட்டு !!!
கடைசியில் என்னுடைய இந்த செய்தியை போடுறேன் னு நேற்று லோக்கல் பத்திரிகை டிவியில் காட்டுறேன்னு !!! ரூபாய் 10ஆயிரம் வாங்கிட்டு செய்தி போடாமாமல் ஏமாத்திட்டாங்க ஹய்யா என புலம்பினார்.அட கொடுமையே!!!
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் இருந்து சுமார் ரூ.2கோடி பணத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் மாதவன் நேற்று 17-4-2023 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்துள்ளார்.
இதுவரை அடிக்கடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் மனு அன்றைய தினங்களில்... ஸ்டெர்லைட் ஆலை நல்ல மிக உசந்த ஆலை மக்களுக்கு ரொம்ப நல்லது செய்யுது கல்விகொடுக்குது மருத்துவமனையில் மருந்து கொடுக்குது வேலை கொடுக்குது கொரானாவுக் ஆக்ஸிஜன் கொடுக்குது என அளந்த படி திறந்து விடுங்கள் என ஆலை தரப்பு ஆதரவு கோஷ்டியே மாவட்ட அலுவலகத்தில் வழக்கமாக டேரா போடுவாங்க...!!!!
இன்று 17-4-2023 ஸ்டெர்லைட் ஆலை சுமார் ஒரு கோடி 92 லட்சம் என்னை ஏமாற்றி விட்டது ஐய்யோ என்னை காப்பாற்றுங்கள் பணம் பெற்று தாருங்கள் என்றார் மாதவன்
ஸ்டெர்லைட் ஆலை சாயம் வெளுத்து போச்சா என அள்ளி அள்ளி வழங்குது என சொன்னாங்களே அது இப்படி அம்மாஞ்சி களை சுரண்டி ஏமாற்றி தானா என கேட்க தொடங்கி உள்ளார்கள்.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு மே22ல் நடைபெற்ற தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தால் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் அவர் களின் உயிர் தியாகத்தால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்த நிறுவனம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட வேலை சம்பந்தமாக ஸ்டெர்லைட் ஆலை தரப்பினர் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி கட்டிட ஒப்பந்ததாரர் மாதவன் என்பவர் மனு அளித்தார்
அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை கணபதி நகரில் உள்ள SHA கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி கண்ஸ்ட்ரக்சன் ஆக ஒப்பந்த பணியில் கட்டிட வேலை செய்து வந்தோம்.
2015-2017 வரை பார்த்து வந்த பணி காரணமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் அதற்கான பணம் தரவில்லை. மேலும், எங்களுடைய பொருட்களும் பணி செய்யும் தளவாடல்கள் எல்லாம் ஆலையில் இருந்து திரும்ப எடுக்க முடியவில்லை. இது குறித்து பலமுறை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கேட்டபோது இழுத்தடிக்கின்றனர்.
ஆகவே ஸ்டெர்லைட் ஆலை மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து பணம் பெற்று வழங்குமாறு கேட்டு கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக