புதன், 31 ஜனவரி, 2024

ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு வழக்கு தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது பொய் என்பதால் கோபமான நீதிபதிகள்!!!

thoothukudileaks 1-2-2024

Arunan journalist 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு நீதிமன்றத்தில்  தமிழக அரசு வழக்கறிஞர் இராமன் கூறியது பொய் தகவல் என்பதால் கோபமடைந்த நீதிபதிகள்  பரபரப்பு!!!



நேற்று (31.01.2024) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி   சுந்தர், மாண்புமிகு நீதிபதி  செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 


அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்   இராமன்  ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார்.


 மேற்சொன்ன நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் தான் முடிவு செய்தோம் என நீதிபதிகள் தெரிவித்தபோது,  நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை இப்போது வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வரவிருக்கின்ற சட்டமன்றக்கூட்டத் தொடரில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை  சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்  தெரிவித்தார்.

 இது உண்மைக்குப் புறம்பானது. 


ஏனெனில் கடந்த 18 அக்டோபர் 2022  அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விளைவாக   ஆணையிடப்பட்டு அதிகாரிகளின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  


இந்த தகவல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


ஆகவே அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வேதாந்தா (ஸ்டெர்லைட்) குழுமத்தின் வழக்குகளில் ஆஜாராகாத வழக்கறிஞராக இருந்தால் சிறப்பு என்று மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தனது கருத்தைப் பதிவு செய்தார். 


வழக்கு பிப்ரவரி 21 மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக