thoothukudileaks 22-4-2023
news by arunan
தூத்துக்குடி காவல்துறை க்கு புகார் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பிரஸ் மீட் எனும் பெயரில் அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றார்கள்.இவர்கள் மீது நடவடிக்கை காவல்துறை மெத்தனமாக இராமல் உடனே எடுத்திட வேண்டும். தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க படவேண்டும் என பரபரப்பு ஏற்பட்டதுள்ளது.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி காவல்துறை அதிகாரி க்கு அளித்துள்ள புகார் மனு தெரிவித்ததாவது;-
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
Anti-Sterlite People's Movement
பெறுநர்: உயர்திரு துணை காவல் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி நகர உட்கோட்டம்
தூத்துக்குடி.
தேதி : 22.04.23
பொருள்:-
ASPM மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி பாத்திமா பாபு அவர்கள் மீது...
அவதூறு செய்திகள் பரப்பி வரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி....
ஐயா,
கடந்த 11/4/2023 அன்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தனலட்சுமி,நான்சி,
சந்தனராஜ், சம்சு மற்றும் 10 பேர் கூட்டாக சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில், அவதூறான பரப்புரை செய்துள்ளார்கள்.
போராட்டத்திற்கு....
2018ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு
வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தான் ஆலைக்கு எதிராக
போராடினார்கள் என்றும், பேராசிரியர் பாத்திமா பாபு வீராங்கனை
அமைப்பின் மூலம் தான் பணம் பெற்று போராட்டம் நடத்தினார்கள் என்றும்
இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் வெளிநாட்டில் இருந்து கையூட்டு
பெற்றார்கள் என்றும் ஒரு தனி நபரின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக
அவதூறாக பேசி பேட்டி கொடுத்துள்ளார்கள்.
பேராசிரியர் பாத்திமா பாபு அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும்
விதமாக இந்தப் பேட்டி உள்ளது. இந்த செயல், அவர்களை மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாக்கி யுள்ளது. இப்படி அபாண்டமான, ஆதார மற்ற
பரப்புரைகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்படி இந்த புகார் மனுவை கொடுக்கிறோம்.
இப்படிக்கு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக