சனி, 22 ஏப்ரல், 2023

விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கீதாஜீவன்

thoothukudileaks 23-4-2023

photo news by shanmuga sunthram 

துத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கீதாஜீவன்



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் காவல்துறையில் பணிபுரிகிறார்.. 


இவர் தாய் செல்வ பாரதி இரண்டு பேரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு மூன்றாம் மைலில் உள்ள காவலர் குடியிருப்புக்கு வந்து கொண்டிருந்தனர்.


 அப்போது, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வேகத்தடையில் வரும்போது  செல்வபாரதி கீழே  விழுந்துள்ளார். பின்னர் தலையில் பலத்த அடிபட்டு இரத்தம் கொட்டியது..

இரவு 11 மணி என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மகன் முத்து குமார் செய்வதறியாத திகைத்து நின்றார். 


அப்போது அந்த வழியாக வந்தார்.... இரவு 11 மணி அளவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி செல்வ பாரதியை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார்.



 அமைச்சர் கீதா ஜீவன் அவரின் இந்த மனிதாபிமான செயலால் பாராட்டு பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக