thoothukudileaks 22-4-2023
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 7 இடங்களில் இன்று 22.04.2023 நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது
"அதிமுக பொதுசெயலாளராக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணியை மும்முறமாக துவங்கி உறுப்பினர் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்த உத்தரவிடப்பட்டுளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்
அதன்படி அதிமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் காலை 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் செட்டியார் திருமண மண்டபத்திலும் தூத்துக்குடி மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் காலை 10 மணிக்கு பானுபிருந்தாவன் ஹாலிலும்,
மத்திய தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் காலை 11 மணிக்கு டூவிபுரம் 5 பூங்கா எதிர்புறம் செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்திலும் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் மதியம் 12 மணிக்கு லூர்தம்மாள்புரம் ரபேல் ஜோசப்பின்அம்மாள் நூற்றாண்டு மண்டபத்திலும், வடக்கு பகுதி கழகம் சார்பில் மதியம் 1 மணிக்கு பொன்சுப்பையா நகர், லீலா பொன்சுப்பையா மஹாலிலும்,
தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் மாலை 4 மணிக்கு தங்கம்மாள் புரம் காமராஜர் அரங்கத்திலும் மத்தியவடக்கு பகுதி கழகத்தின் சார்பில் மாலை 5 மணிக்கு தூத்துக்குடி 2ம் கேட் வரதராஜபுரம் லாரி ஓனர் சங்கக் கூட்ட அரங்கிலும் என 7 இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மேற்காணும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார்.
இதில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக புதிதாக இணைத்து கொள்பவர்களும் புதுப்பித்துக் கொள்பவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் நடைபெறுகின்ற இடத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், தொகுதி பணிக்குழு கண்காணிப்பாளர்கள், அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக