புதன், 22 மே, 2024

துப்பாக்கி சூடு இறந்தவர்களின் கல்லறைக்கே சென்று ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி

 thoothukudi leaks 

 22-5-2024


தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போலீஸ் துப்பாக்கி சூடு இறந்தவர்களின் கல்லறைக்கே சென்று ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி  செலுத்தினர் 




இது பற்றிய செய்தியாவது:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில்  குமரட்டியாபுரம், காயலூரணி,தெற்கு வீரபாண்டியபுரம், மீள விட்டான், பண்டாரம் பட்டி மடத்தூர், பெரியநாயகிபுரம் சிலுவைப்பட்டி, புதுத்தெரு, டூவிபுரம், தேவர் காலனி  உட்பட  பல பகுதிகள நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.



 மேலும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருக்கமான இந்த நிகழ்வு கண்ணீர் வேதனை தருகிறது 



அடுத்து...

தூத்துக்குடி மக்களின் தலையாய கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே வந்தாச்சு

ஆலையை அகற்ற தாமதம் ஏன்? என்ற கேள்விதான். 




தமிழக அரசிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நேரத்தில் நமது மக்கள் கூட்டமைப்பின் சார்பிலும் இதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.


தூத்துக்குடி மக்களையும், மண்ணையும் காப்பதற்கு தன்னுயிரை ஈந்த  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள். காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 6 வருடம் ஆகிறது.


உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசும் சிறப்பாக வாதாடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவு பெற்றது.


 ஆனால் ஆலை அகற்றப்படாமல் உள்ளதால் மீண்டும் சீராய்வு மனு என்று சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளில் ஆலை நிர்வாகம் நுழைந்து விடக்கூடாது. 


மக்களிடம் வாக்குறுதி அளித்தபடி தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடியிலிருந்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை  அகற்ற (DISMANTLE) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றவாளிகளை அடையாளம் காட்டி, குற்றவியல் நடவடிக்கை, நிர்வாக துறை நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் பரிந்துரைத்தும் இதுவரை தமிழக அரசு குற்றவாளிகள் மீது  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


 சென்னை உயர் நீதிமன்றத்திலும் பரிந்துரையை செயல்படுத்துவது அரசின் விருப்பம். கட்டாயம் கிடையாது என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 


மக்கள் மன்றத்தில் முதல்வர் உறுதி கூறியது போல உயர் காவல் அதிகாரிகள் உட்பட கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு  9443584049, 8122275718, 7305172352, 9940971599, 9751119005, 9789497542, 9965345695, 9894574817, 8870457518, 7548856166.l

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக