வெள்ளி, 27 ஜனவரி, 2023

தூத்துக்குடி மட்டகடை பேட்ரிக் சர்ச்சில் டிஷ்யூம் டிஷ்யூம் இரு கோஷ்டிகள் மோதல்

 thoothukudileaks 27-1-2023

photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடி மட்டகடை பேட்ரிக் சர்ச்சில்  டிஷ்யூம் டிஷ்யூம் சபையிலுள்ள இரு கோஷ்டிகள் மோதலையடுத்து பாதுகாப்பு க்கு வந்த போலீசார்  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி 1ம் கேட் மட்டக்கடை பேட்ரிக் சர்ச்சில் நேற்று (26-1-20 23 )மாலை 6 மணிி அளவில் மீண்டும்

 தூத்துக்குடி-  நாசரேத் டயோசிஷன் தேர்தலில்  நின்ற இரு அணியினருக்கும்   மோதல்  ஏற்பட்டது. 


தூத்துக்குடி பேட்ரிக் சர்ச்சில்  பாதிரியார் செல்வின்துரை தலைமையில்...

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சேகர மண்டல கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. 


இந்த கூட்டத்திற்கு எஸ்.டி.கே.ராஜன், தேவராஜ், கோயில்ராஜ், ரூபன் வேதசிங் ஆகியோருக்கு முறையாக அழைப்பு விடுக்காமலும், அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆலய வளாகத்தில் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பு நால்வர் நீக்கம் தொடர்பாக  எஸ்.டி.கே.ராஜன் தரப்பு ஆதரவாளர்கள் கேள்வி கேட்டு திரண்டனர். ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளை பேசி திட்டிய படி மோதி கொண்டனர் 

இவ் விஷயமறிந்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தார்கள்.


அதன் பின்பும் லே செயலாளர் கிப்சன் தரப்பினருக்கும் எஸ்.டி.கே.ராஜன் தரப்பினருக்கும் போலீசார் முன்னிலையில் கடும் வாக்குவாதம் முற்றியதால் ஆலய வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 


பின்னர் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து டேவிட் வசந்தகுமார் செய்தியாளர்களிடம்   பேசியதாவது :- 

சபைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு 2021ம் ஆண்டில் சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்தும் சபையாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எந்தவொரு உறுப்பினரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். மேலும், திருமண்டலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவர்களுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும், என்று கூறினார்.  

தூத்துக்குடி தூய பரி பேதுரு ஆலயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கடும் மோதலால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக