thoothukudileaks 28-1-2023
news by Roja arunan
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்பி.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை பேரூராட்சி, கடம்பாகுளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் இருந்து வந்த காரணத்தால் மழை காலங்களில் உபரி நீர் வெளியேற முடியாத நிலை இருந்தது, இதைத்தொடர்ந்து...கனிமொழி கருணாநிதி எம்பி தொடர்ந்து எடுத்த முயற்சியின் காரணமாக தற்போது கால்வாயை தூர்வாரும் பணிகளுக்கு நீர்ப்பாசன துறை சார்பில் ரூபாய் 34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,....
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி
இன்று (28/01/2023) சனிக்கிழமை, கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணி, குளத்தின் கரைகளை பலப்படுத்துவது, மடைகளை புதுப்பிப்பது, உபரி நீர் வடிகால் ஓடையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைப்பது, ஏற்கனவே உள்ள குறுகிய பாலங்களை உயர்மட்ட பாலமாக தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான .அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சிய.ர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஒன்றிய பெருந்தலைவர்.ஜனகர், ஒன்றிய செயலாளர் .நவீன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக