புதன், 23 ஏப்ரல், 2025

தூத்துக்குடி செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை விழா

 தூத்துக்குடி லீக்ஸ் 

செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது

சாயர்புரம், ஏப்ரல் 24 –
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தைச் சேர்ந்த செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் சி.எஸ்.ஐ. ஆலயத்தில், 119வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா, பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.



விழாவை முன்னிட்டு ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து 22ம் தேதி காலை சிறப்பு உபவாச ஜெபமும், மாலை பண்டிகை ஆயத்த ஆராதனையும் நடைபெற்றது.


23ஆம் தேதி காலை பண்டிகை மற்றும் திரு விருந்து ஆராதனையில் குப்பாபுரம் சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் செய்தி வழங்கினார். மாலை பொதுமக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் சேகர குரு இம்மானுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக SDK. ராஜன், ஜெபச்சந்திரன், S.D. அருண் ஜெபக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலய பொருளாளர் பிரகாஷ் ராஜ்குமார், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங் ராஜ், சபை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், சாந்த சீலன், சாந்த சிங், எமில் டேவிட், SSK. சோபன் பாலசிங், ஆபிரகாம் அரவிந்தராஜ், அருண் தேவதுரை ஆகிய ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள், சபை மக்கள் மற்றும் செபத்தையாபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

படக் குறிப்பு: செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் நடைபெற்ற அசன பண்டிகை விழா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக